* ஆர்.கே.ராதாகிருஷ்ணன்
இரு பெரும் திராவிட இயக்கங்களின் ஏகபோக அரசியலுக்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் சில சில்லறைக் கட்சிகள் செயல்பட்டு வரும் நிலையில், அஇஅதிமுக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணிகளிடையே தீவிரமான போட்டியைப் பார்ப்பதற்கு தமிழகம் தயாராக ஆகிவிட்டது. பா.ஜ.க. ஒரு கூட்டணிக் கட்சியாக இருக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பது என்று விருதுநகர் பள்ளப்பட்டி பள்ளர்கள்
மார்ச் 14 ஆம் தேதி மாலை வரை முடிவு செய்திருந்தனர். தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் பட்டியலுக்கு பள்ளர்கள் மற்றும் இதர ஆறு ஜாதிகளை தேவேந்திரகுல வேளாளர் என்ற புதிய பெயரில் கொண்டு வரவேண்டும் என்ற , தென்தமிழ்நாட்டில் பலமான அடித்தளம் கொண்டிருக்கும் புதிய தமிழகம் என்ற கட்சியின் கோரிக்கையை பா.ஜ.க. அரசு நிறைவேற்றியதுவே இதன் காரணம். டில்லியில்ஆட்சி செய்யும் யாரோ ஒருவர், எங்களது கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொண்டு ஏதோ ஒன்றை செய்திருக்கிறார்கள் என்பதைக் கண்டு நாங்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் மக்கள் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டுமா அல்லது மிகவும் பிற்படுத்தப் பட்ட பிரிவு மக்கள் பட்டியலில் சேர்க்கப்பட வேண் டுமா என்பதைப் பற்றி முடிவு செய்யாமல் எங்களது மக்கள் குழப்பமும், ஒத்த கருத்து அற்றவர்களாகவும் இருந்த போதிலும், எங்களைப் பொறுத்தவரை பா.ஜ.க. நன்மையே செய்திருக்கிறது என்று நாங்கள் முடிவு செய்துவிட்டோம் என்று பள்ளப்பட்டியில் வசிக்கும் விவேகானந்தன் என்பவர் கூறினார்.
மார்ச் 14 அன்றைய தினம் மாலையில், மதுரை விமான நிலையத்திற்கு தேவர்பெரு மக்களின் பெருமைக்கு அடையாளச் சின்னமாக விளங்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பெயரைச் சூட்டவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று
அஇஅதிமுக அறிவித்ததில் இருந்து இவையெல்லாம் மாறிப் போய்விட்டன. அஇஅதிமுக தேர்தல் அறிக்கையில் 79 ஆம் எண் உறுதிமொழியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளர்களும், தேவர்களும் பாரம்பரியமாகவே ஒருவருக்கொருவர் பகைமை உணர்ச்சி கொண்டு விளங்கி வருபவர்கள் ஆவர். 1990 களின் இடையில், தென் தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் (முக்கியமாக பள்ளர்களுக்கும்) தேவர்களுக்கும் இடையேயான மோதல்கள் வெடித்துக் கிளம்பின. பள்ளர்களுடன்
கலப்புத் திருமணம் செய்து கொள்வது, முஸ்லிம்களை மணந்து கொள்வதை எதிர்ப்பதற்கான லவ் ஜிஹாத்தை விட மோசமாக மேற்கொள்ள வேண்டிய ஒரு போராட்டம் என்று தேவர்கள் கருதினர். (இந்தியா முழுவதிலும் எதிரொலித்த ஒரு வழக்கில்,
கவுசல்யா என்ற தேவர் பெண்ணை மணம் புரிந்து கொண்ட சங்கர் என்ற தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் பட்டப் பகலில் அனைவரும் காணும் வகையில் கவுசல்யாவின் நெருங்கிய உறவினர்களால்
உடுமலைப்பேட்டையின் தென் பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டார்.)
"விமான நிலையத்துக்கு யார் நிலம் கொடுத் தார்கள்? எங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்கள் அல்லவா கொடுத்தார்கள்? எங்கள் நிலத்தையும் எடுத்துக் கொண்டு எங்களை அவர்கள் எவ்வாறு மதிக்காமல் போகின்றனர்?" என்று விவேகானந்தன் கேட்கிறார். இரண்டு கிராமங்களில் உள்ள தங்களின் சமூக மக்கள்தான் மதுரை விமான நிலையத்துக்கு நிலம் அளித்தனர் என்று பள்ளர் தலைவர்கள் பெருமை யுடன் கூறுகிறார்கள். எனவே அதற்கு சூட்டப்படும் பெயரில் மாற்றம் செய்யும்போது, பள்ளர்களுக்குத்தான் மரியாதை கொடுக்க வேண்டுமே அன்றி தேவர்களுக்கு அல்ல. பள்ளர்கள் தேவேந்திர குல வேளாளர்கள் என்று வகைப்படுத்தப்பட்டதே அவர்களுக்கு செலுத்தப்பட்ட மரியாதை அல்லவா என்று கேட்ட போது, அது எங்கள் உரிமை.
மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டப்படுவது எங்களுக்கு என்ன கேடு செய்தது என்றால், இந்தியா முழுமையாலும் அளிக்கப்பட வேண்டிய மரி யாதையை அது எங்களுக்கு மறுத்துள்ளது என்று விவேகானந்தன் வெடித்துக் கூறினார்.
சிவகாசி சட்டமன்றத் தொகுதியின் 2 . 6 லட்சம் வாக்காளர்களில் 8 சதவிகிதம் அளவில் பள்ளர்கள் இருக்கின்றனர். அஇஅதிமுக கூட்டணிக்கு தரும் ஆதரவை விலக்கிக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். மற்றொரு தாழ்த்தப்பட்ட பிரிவு சமூகமான
பறையர் சமூகத்திற்கு 4 சதவிகித அளவில் வாக்குகள் உள்ளன. எந்த ஒரு தேர்தலிலும் இந்த இரண்டு சமூகத்தாரும் ஒன்று போல வாக்களிப்பதுவே, தேர்தல் வெற்றி தோல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
சிவகாசிக்கு வடமேற்கே 20 கி.மீ. தொலைவில் உள்ள சிறீவில்லிபுத்தூரில், தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களின் பட்டியலில் இருந்து பள்ளர்களை நீக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கோரும் சுவரொட்டிகளும் தட்டிகளும் தோன்றின. இதுவே புதிய தமிழகம் கட்சி கோரிய கோரிக்கையுமாகும். ஒரு தட்டி செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களின் பட்டியலில் இருந்து எங்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று குறிப்பிட்டு இருப்பதை விலக்கும் அரசு ஆணை ஒன்று பெறுவதற்கே எங்கள் ஒவ்வொருவரது மூச்சுக் காற்றும் அர்ப்பணிக்கப் படுகிறது.
இந்த தட்டி செய்தி சிறீவில்லிபுத்தூர், கோட்டைப்பாடி தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களாலும், இளைஞர்களாலும் வைக்கப்பட்டிருந்தது. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் 20 சதவிகிதத்தினர் உள்ளனர். இதில் பள்ளர்கள் 25 மாவட்டங்களில் பரந்து இருக்கின்றனர். ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களில் 17 சதவிகிதத்திற்கும் சற்று கூடுதலாக பள்ளர்கள் இருக்கின்றனர்.
அவர் களது மன நிறைவின்மையை தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ள தி.மு.க. முயல்கிறது.
மதுரை விமான நிலையத்துக்கு பெயர் மாற்றம் செய்யும் ஒரு சிக்கல் நிறைந்த முடிவைப் பற்றி திமுக எந்த விமர்சனமும் செய்யவில்லை. எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டி ஊக்குவிப்பதற்காக தென் தமிழகத்தில் உள்ள இந்த சமூக மக்களின் இரண்டாம் மட்ட தலைவர்கள் மூலம் தி.மு.க. முயற்சி செய்து வருகிறது.
புதிய தமிழகக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கிருஷ்ணசாமிக்கு அதிமுக-பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவான அனுதாபம் உள்ளது. தங்களது கட்சி 60 தொகுதிகளில் தனியாகப் போட்டி இடுகிறது என்று அவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் கிருஷ்ணசாமி அவர்களது சமூக மக்களாலேயே விரும்பப்படாதவர் ஆவார். இதன் காரணம் கடந்த சில பத்தாண்டு காலத்தில், அவர் ஏராளமான உறுதி மொழிகளை அறிவித்தாரே அன்றி, அவற்றில் மிக மிகக் குறைவான உறுதிமொழிகளையே நிறைவேற்றி யுள்ளார் என்பதுதான். அதிருப்தி அடைந்த தங்கள் இன மக்களின் வாக்குகள் தங்களுக்கே கிடைக்கும் என்றும் திமுக கூட்டணிக்கு செல்லாது என்றும் கருதியே தேர்தலில் தனியாகப் போட்டியிடும் முடிவுக்கு அவர் வந்துள்ளார். அவரை இன்னமும் பின்பற்றி செயல்படும்
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அவரது தொண்டர்கள், இம்முறை திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதே தங்களுக்கு நன்மை தரும் ஒரு தேர்வாக இருக்கும் என்று "ஃப்ரண்ட் லைனு"க்கு கூறினர்.
இந்த சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு தலைவரான ஜான் பாண்டியன் சந்தேகத்திற்கு இடமான உறுதியற்றவர் என்று கருதப்படுபவர்ஆவார். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை அவர் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள அவர் கடந்த இருபது ஆண்டுகளில் சென்னை எழும்பூர் தனித் தொகுதியில் இரண்டாவது முறையாக இப்போது போட்டியிடுகிறார். 2001 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வேட்பாளர் பரிதி இளம்வழுதிக்கு கடுமையான போட்டி அளித்த ஜான் பாண்டியன் 89 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இம்முறை அவரை எதிர்ப்பவர் திமுகவின் செய்தித் தொடர்பாளரான ஈ. பரந்தாமன் ஆவார். அவர் கூறுகிறார்: "எழும்பூர் தொகுதி வாக்காளர்கள் எங்கள் இருவரைப் பற்றியும் நன்கு அறிந்துள்ளனர். என்னைப் போன்ற கறை படியாத பிரதிநிதி வேண்டுமா அல்லது, கழுவிப் போக்க முடியாத சிவந்த கறைபடிந்த கைகளைக் கொண்ட அவர் வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்."
இந்த சமூகத்தின் மூன்றாவது தலைவராக இருக்கும் கே. செந்தில் மள்ளர் என்ற ஒருவர் இருக்கிறார். மள்ளர் மீட்பு இயக்கம் என்ற ஒரு சமூக சேவை நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். ஆளும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தராத அவர், மக்களின் நிலையை உயர்த்துவதையே தனது அமைப்பின் நோக்கமாகக் கொண்டுள்ளார்.
இதன் ஒட்டு மொத்த பாதிப்பும் என்னவென்றால், அவர்களது ஜாதியின் பெயரை தேவேந்திர குல வேளாளர் என்று மாற்ற வேண்டும் என்ற தென்தமிழ் நாட்டு தாழ்த்தப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் வாக்குகளை மிகப் பெரிய அளவில்
பெறலாம் என்று கருதிய பா.ஜ.க.வின் உத்தி, அதன் கூட்டணிக் கட்சியான அஇஅதிமுக மதுரை விமான நிலையத்தின் பெயரை மாற்றுவது என்ற திட்டத்தை அறிவித்ததன் காரணமாக, பயனற்றுப் போனது.
தென் தமிழக மக்களின் அதிருப்தி
அஇஅதிமுகவின் இந்த முடிவால் ஒரு சில மாநில பா.ஜ.க. தலைவர்கள் ஏமாற்றமும், கவலையும் அடைந்துள்ளனர். ஆனால் இந்த முடிவு தவிர்க்க இயலாதது என்று ஒரு அஇஅதிமுக தலைவர் கூறுகிறார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) என்ற பெயரில் அஇதிமுகவில் இருந்து பிரிந்தவர்களைப் போலவே, அதிமுகவினரும் பெற இயன்ற தேவர் சமூக வாக்கு வங்கியில் ஓர் ஆழ்ந்த பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தேவர் சமூகத்தின் நீண்டகால கோரிக்கை எதையாவது நிறைவேற்றி, தங்களையே தேவர் சமூகத்தின் பாதுகாவலர் என்று தெரிவித்துக் கொள்ள
வேண்டும் என்ற கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரான டி.டி.வி. தினகரன் தான் அமமுக வின் தோற்றுனர் ஆவார்.
தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத ஆளுங்கட்சியின் ஒரு மூத்த தலைவர், "மதுரை விமான நிலையத்தின் பெயரை மாற்றி அமைப்பது என்பது இரண்டு பக்கத்திலும் கூர்மையாக இருக்கும் கத்தியைப் போன்று ஆபத்து நிறைந்த ஒரு செயலாகும். அது எங்களுக்கு பயன் அளிக்குமா என்பது பற்றி இன்னமும் எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. என்றாலும், அது எங்களுக்கு தகுந்த பயனை அளிக்கும் என்றே நாங்கள் உண்மையாக நம்புகிறோம்" என்று கூறினார். எப்படியிருந்தாலும், இதுவும் கூட அதிமுகவுக்கு பயன் அளிக்கப் போவ தில்லை. ஆளும் கட்சி எதுவாக இருந்த போதிலும், தமிழ்நாட்டு அரசின் அதிகார மய்யத்துடன் தேவர் சமூகம் எப்போதுமே நெருக்கமாக இருந்து வந்திருக்கிறது. 2016 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, தங்கள் சமூகத்தைச் சேர்ந்த எவராவது ஒருவர் ஆட்சி அதிகாரத்தைக் கைப் பற்றுவார் என்று தேவர் சமூகம் எதிர்பார்த்தது. இந்த சமூகத்தைச் சேர்ந்த அஇஅதிமுகவின் ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு குறுகிய காலத்துக்கு முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.
பன்னீர்செல்வத்துக்கு இன்னமும் தேவர் சமூகத்தில் மரியாதை இருக்கும் நிலையில்,
அந்த உயர் பதவிக்கு அஇதிமுக அவரைத் தேர்ந்தெடுக் காமல் டி.டி.வி. தினகரனையே தேர்ந்தெடுத்தது.
அரசியலில் இருந்து தான் விலகிக் கொள்வதாகவும், மறுபடியும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும் என்று தான் நம்புவதாகவும் மார்ச் 3 ஆம் தேதியன்று சசிகலா அறிவித்தார். தேவர் சமூகத்தில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது. தின கரனை அவர் ஆதரிக்கிறார் என்பது அனைவருமே அறிந்த ரகசியமாகும். எனவே, தேவர் சமூக வாக்குகள் பிளவு பட்டுப் போவதே அஇதிமுக கவலை கொள்வதற்கான காரணமாகும். உண்மையைக் கூறுவதானால்,
மத்திய தென் தமிழகத்தில் உள்ள சிக்கல் நிறைந்த மிகமிக முக்கியமான இரண்டு சமூகங்களை அதிமுக பகைத்துக் கொண்டுள்ளது. இந்தப் பகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இது திமுக வுக்கு அளித்துள்ளது.
தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக 26 இடங்களையும், அதிமுக 32 இடங்களையும் வென்றன.
(தொடரும்)
நன்றி: 'ஃப்ரன்ட் லைன்' 08-04-2021
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment