பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் பேராசிரியை தி. விஜயலெட்சுமிக்கு அய்.எஸ்.டி.இ.யின் (ISTE) சிறந்த பாலிடெக்னிக் ஆசிரியர் விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 5, 2021

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் பேராசிரியை தி. விஜயலெட்சுமிக்கு அய்.எஸ்.டி.இ.யின் (ISTE) சிறந்த பாலிடெக்னிக் ஆசிரியர் விருது

வல்லம், மார்ச் 5 இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் பாலிடெக்னிக் கல்லூ ரியில் சிறப்பாக செயல்படும்  ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாடர்ன் ஆபீஸ் துறை பேராசிரியை தி. விஜய லெட்மி அவர்கள் 2020ஆம் ஆண்டிற்கான இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழக சிறந்த பாலிடெக்னிக் ஆசி ரியர் விருதிற்கு தேர்ந்தெடுக் கப்பட்டார்.

27.02.2021 அன்று தியாக ராஜர் பாலிடெக்னிக் கல் லுரியில்ISTE சார்பில் இணையவழி மூலம் நடை பெற்ற   ISTE Polytechnic Faculty Virtual Mode Convention இல் நமது கல்லூரியின்  தி. விஜய லெட்சுமி S.Lect / MOP  அவர்களுக்கு ISTE இன் சிறந்த பாலிடெக்னிக் ஆசிரியருக் கான விருது வழங்கி கௌர விக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் இக் கல்லூரியின் 21 பேராசிரி யர்கள் பல்வேறு தலைப்பு களில் கட்டுரைகளை வாசித் தளித்தார்கள். இக் கல்லூரி யின் துணை முதல்வர் டாக் டர் .ஹேமலதா மற்றும் பேராசிரியை திருமதி ஜி. ரோஜா ஆகியோர் தயாரித் தளித்த Significance of Student Centered Learning (SCL) and Social Emotional Learning(SEL) for future ready graduates என்ற தலைப்பிலான கட்டுரையும் மற்றும் மாடர்ன் ஆபீஸ் பிராக்டீஸ் துறை தலைவர் டாக்டர் .மலர்க்கொடி தயாரித்து வாசித்தளித்த  Role of Industries  in Technical Education   தலைப்பிலான கட்டுரையும் சிறந்த கட்டுரைக்கான விரு துகள் (Best Paper Awards) வழங்கப்பட்டுள்ளது. விரு துகள் பெற்றவர்களை கல் லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா அவர்கள் பாராட்டினார்.

No comments:

Post a Comment