அரசியல் பரம்பரை யுத்தத்தில் தளபதி ஸ்டாலின் வெற்றிபெறுவார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 1, 2021

அரசியல் பரம்பரை யுத்தத்தில் தளபதி ஸ்டாலின் வெற்றிபெறுவார்!

திராவிடம் வெல்லும் - உதயசூரியன் வெற்றி கொள்ளும்!

தி.மு.. தலைவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் வாழ்த்து!

‘‘அரசியல் பரம்பரை யுத்தத்தில் தளபதி மு..ஸ்டாலின் வெற்றி பெறுவார்; திராவிடம் வெல்லும் - உதயசூரியன் வெற்றி கொள்ளும்'' என்று தி.மு.. தலைவர்  தளபதி மு..ஸ்டாலின்  அவர்களின் பிறந்த நாளையொட்டி, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச்  செய்தி - அறிக்கை வருமாறு:

திராவிடத்தின் பெருமையெல்லாம் திசை எட்டும் தினம் தினம் சேர்க்கும் அரும்பணியாற்றிடும்  ஆற்றலும் ஆளுமையும் நிறைந்த அருமைச் சகோதரர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் இன்று (1.3.2021) அகவை 68 இல்  அடியெடுத்து வைக்கிறார்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பரம்பரை யுத்தத்தை அண்ணா, கலைஞர் வரிசையில் தளபதி மு..ஸ்டாலின் தொடரு கிறார் - தொய்வின்றி களத்தில் கன வெற்றி களைக் குவிக்கிறார்!

ஓயாத உழைப்பு, வற்றாத அன்பு, வளமற்ற நம் மக்கள்மீது, எதையும் ஆழ்ந்து பரிசீலித்து, அனுபவத்தோடு இணைத்து சீரிய செய லாக்கம், தொண்டர்களை அரவணைப்பதில் அண்ணா, கலைஞரிடம் கற்ற பாடம் - எதிர் நீச்சலாயினும் எதிர்கொண்டு வெற்றி - வாகை சூடும் தளராத தந்தை பெரியாரின் போர்க் குணம் - இவற்றை நன்கு வரித்துக்கொண்ட கொள்கை வைரம்தான் திராவிடத் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள்.

அவரது ஆளுமையின் முழு வீச்சை இன்னும் சில மாதங்களில் அகிலமே அறிந்து அதிசயிக்கக் காத்திருக்கும் இத்தேர்தல் காலத்தில், அவரது இயக்கத்தையும், கூட்டணி யையும் வீழ்த்திட விபீடணர்களின்  துணை கொண்டு ஆரியம் வீரியம் கொள்ள நினைப்பதைச் சரியாகப் புரிந்துகொண்டோம் - ஏமாறமாட்டோம்; எதிர்கொண்டு முறியடிப்போம் என்பதை ஒளிவு மறைவின்றி பிரகடனப்படுத்தி, தேர்தல் அரசியல் போர்க் களத்தில் கம்பீரமாக  நின்று, இன எதிரிகளைச் சந்திக்க சரியாக சூளுரைத்து, சுயமரியாதைச் சூடு போட்டுள்ளார்.

‘‘அவர் (பிரதமர் மோடி)'' ஆரியத்தைப் புகுத்த நினைப்பவர்; நாங்கள் அதனை திராவிடத்தால் தடுத்துக் கொண்டிருப்பவர்கள். இந்த மோதல், காலம் காலமாக நடந்துவருவதுதான் என்பதை விளக்கமாகப் பேசிடும் நம் தளபதியின் கையில் ‘‘திராவிடம் வெல்லும்'' என்று காட்டிடும் வண்ணம் வெற்றிக் கனி பறித்து அளிக்கக் கட்டுப்பாட்டுடன் கண்ணியத்தோடு, கடமையாற்றி அயர்வின்றி உழைக்க உறுதியேற்று - அதையே அச்சார வெற்றி மாலையாக இன்று அவர் கழுத்தில் அணிவிக்கிறோம்!

தி.மு.. அணியின் வெற்றி- திராவிடத்தின் மீட்சியாக

திக்கெட்டும் புகழ் பரப்பும் தீரர்களின் -ஆட்சியாக மலரட்டும்!

வாழ்க தளபதி! வாழ்க வாழ்கவே!!

உதய சூரியன் உதித்து விடியல் வரட்டும்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

1.3.2021

No comments:

Post a Comment