குடந்தை, மார்ச் 4- கும்பகோணம் மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 2-_3-_2021 அன்று மாலை 6.30 மணியளவில் கும்பகோணம் பெரியார் மாளிகை யில் நடைபெற்றது
கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமை வகித்து பொதுக்குழு மற்றும் தீர் மான விளக்க பொதுக்கூட்டம் குடந்தையில் நடத்திட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். மாநாடு போல் நடத்திட, செயல்திட்டங்களை விளக்கி உரையாற்றினார்.
தொடர்ந்து தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், பொதுக்குழு உறுப்பினர்கள் வை.இளங்கோவன், சு.விஜயக்குமார், க.சிவக்குமார், குடந்தை தி.இராசப்பா, மண்டல செயலாளர் க.குருசாமி, மாவட்ட ப.க தலைவர் சு.சண்முகம், மாவட்ட அமைப்பாளர் வ.அழகுவேல், திருவி டைமருதூர் ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சங்கர், திருவிடைமருதூர் ஒன்றிய துணைச்செயலாளர் குணசேகரன், குடந்தை சக்திவேல், பாபநாசம் ஒன்றிய தலைவர் தங்க. பூவானந்தம், பாபநாசம் ஒன்றிய செயலாளர்
சு.கலியமூர்த்தி, மாவட்ட பகுத்றி வாளர் கழக துணைச்செயலாளர் திருஞானசம்பந்தம், அறிவுமணி, மாவட்ட மகளிரணி துணைச்செய லாளர் திரிபுரசுந்தரி, பவுண்டரிபுரம் முருகேசன், அரங்க வைரமுடி, மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், குடந்தை ஒன்றியத்தலைவர் ஜில்ராஜ், குடந்தை ஒன்றிய செய லாளர் மகாலிங்கம், குடந்தை மாநகர செயலாளர் பீ.இரமேஷ், மாநகரத் தலைவர் கு. கவுதமன், மாவட்டச் செயலாளர் சு.துரைராசு, மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாநில அமைப்பாளர் இரா.குணசே கரன், காப்பாளர் வெ.ஜெயராமன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நகரச் செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
கலந்துரையாடலில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தீர்மானம்-1 இரங்கல் தீர்மானம்: சுயமரியாதைச் சுடரொளிகள் கொரநாட்டு கருப்பூர் க.தியாக ராசன், திருப்பந்துறை ஜோசப், திருநாகேஸ்வரம் அரியபுத்திரன், திருநாகேஸ்வரம் முருகானந்தம் துணைவியார் பத்மாவதி, குடந்தை பிழைபொறுத்தான், திருப்பனந் தாள் ஒன்றிய தி.மு.க செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா ஆகியோர் மறை விற்கு இந்த கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் - 2: திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தை கும்பகோணத் தில் நடத்திட வாய்ப்பு வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களுக்கு கும்ப கோணம் மாவட்ட திராவிடர் கழகம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் - 3: 13-3-2021 அன்று காலை கும்பகோணம் ராயா மகா லில் திராவிடர் கழக பொதுக்குழு கூட்டத்தையும், மாலை 6 மணி யளவில் கும்பகோணம் கடலங்குடி தெருவில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தையும் மாநாடு போல் எழுச்சியுடன் நடத் துவது என முடிவு செய்யப்படுகிறது.
நிகழ்வுகள் வெற்றிகரமாக நடந்திட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் இணைந்து செயலாற்று வது என முடிவு செய்யப்படுகிறது, பொதுக்குழுவில் பங்கேற்க கும்ப கோணம் வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு
கி.வீரமணி அவர்களுக்கு மாவட்ட கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப் படுகிறது
தீர்மானம் 4: திராவிடர் கழக காப்பாளர், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் 97ஆவது பிறந்தநாள் விழாவினை 23-.4.-2021 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பாபநாசத்தில் சிறப் புடன் நடத்திடுவது என முடிவு செய்யப்படுகிறது.
நன்கொடை அறிவித்து வழங்கியோர்
வை.இளங்கோவன் பொதுக்குழு உறுப்பினர் - 40,000
சி.அமர்சிங் தஞ்சை மாவட்டத் தலைவர் - 10,000
கு. நிம்மதி குடந்தை மாவட்டத் தலைவர் - 10,000
அறிவுமணி முருகேசன் பவுண்டரிபுரம் - 10,000
மு.அய்யனார் மண்டலத் தலைவர் - 5000
க.குருசாமி மண்டல செயலாளர் - 5000
பீ.இரமேஷ் குடந்தை நகர செயலாளர் - 5000
வ.அழகுவேல் மாவட்ட அமைப்பாளர் - 2000
அரங்க. வைரமுடி கும்பகோணம் - 1000
க.சிவக்குமார் பொதுக்குழு உறுப்பினர் - 1000
சங்கர் நாச்சியார்கோவில் - 1000
மேற்கண்ட கழகப் பொறுப்பாளர்கள் ரூ.90,000 நன்கொடையாக அறிவித்தனர்.
No comments:
Post a Comment