பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் ராமதுரையுடன் நேர்காணல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 6, 2021

பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் ராமதுரையுடன் நேர்காணல்

சிதம்பரம் கழக மாவட்டம் - காட்டு மன்னார்குடி வட்டம் புடையூர் ஆசிரியர் .ராமதுரை (வயது 88) பெரியார் பெருந் தொண்டர் அவர்களுடன் நேர்காணல். மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங் கோவன், மாவட்டத் துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன் ஆகியோர் சந் தித்து உரையாடினர்.

கேள்வி: தங்களுக்கு எந்த வயதில் பெரியாரின் கொள்கைகளில் அறிமுகம் ஏற்பட்டது?

பதில்: நான் 1933ஆம் ஆண்டு சிதம்பரம் வட்டம்புடையூரில் பிறந்தேன். அப்பா பெயர் அப்பாதுரை. தாய் சின்னபிள்ளை. எங்கள் ஊரில் ரங்கசாமி நயினார் என்பவர் என்னை மாணவனாக இருக்கும் பொழுது இந்தக் கொள்கையில் ஈடுபடுத்தினார். இந்தக் கொள்கைகளை அறிமுகம் செய் தார்.  நான் ஆண்டிமடத்தில் அய்ந்தாம் வகுப்பு படித்தேன். அப்பொழுது அங்கு ஜெயராம் நாயுடு என்பவர் சிறிய கடை வைத்திருந்தார். அவர்விடுதலைபேப்பர் தபால் மூலம் வாங்குவார். நான் அந்தக் கடைக்கு சாமான் வாங்கப் போகும் பொழுது அந்தப் பேப்பரை பார்த்துள்ளேன். அவர் ஒரு நாள் என்னிடம், இந்த பேப்பரை படிக்கிறாயா என்று கேட்டு என்னிடம் கொடுத்தார். முதன்முதலாக அப்பொழுது தான் விடுதலைப் பேப்பரை தொட்டு எழுத்துக்கூட்டி படித்தேன். அப்பொழு தெல்லாம் புத்தகங்களில் ‘’ , ‘’ இது போல இருக்கும். விடுதலைப் பேப்பரில்லை‘, ‘னைஎழுத்துச் சீர்திருத்த முறையில் இருக்கும். நான் பள்ளிக்கூடத்தில் ஆசிரிய ரிடம் பாடப்புத்தகத்தில் ஒரு மாதிரி இருக் கிறது, கடையில் உள்ள பேப்பரில் ஒரு மாதிரி எழுத்து இருக்கிறதே என்று கேட் டேன். எந்தக் கடையில் என்ன பேப்பர்டா பார்த்த என்று ஆசிரியர் கேட்டார். நான் நாயுடு கடையில்விடுதலைஎன்கிற பேப்பர் பார்த்தேன், படித்தேன் என்று பதில் கூறினேன். உடனே ஆசிரியர் ஏண்டா அங்கெல்லாம் போனாய்? அந்தப் பேப்பரை எல்லாம் ஏன் படித்தாய்? என்று கேட்டு அடித்தார். அது சு.. பேப்பராச்சே; அவரும் சு.. கட்சிக்காரர் ஆயிற்றே என்றார் ஆசிரியர். அப்பொழுது சு.. என்றால் என்னவென்று எனக்கு தெரிய வில்லை. பிறகு, எனக்கு வினவு தெரிந்தபின் அந்தக் கடையை வைத்திருந்த ஜெயராம் நாயுடு, கொலை செய்யப்பட்ட உடையார் பாளையம் ஆசிரியர் வேலா யுதம் நண்பர் என்று தெரிந்து கொண்டேன். எனவேதான் அக்காலத்திலேயேவிடுதலைவாங்கி உள்ளார்.

கேள்வி: எப்பொழுது ஆசிரியர் பணி யில் சேர்ந்தீர்கள்? தந்தை பெரியாரின் கொள்கையில் தீவிரமாக எப்பொழுது ஈடுபட்டீர்கள்?

பதில்: ஆண்டி மடத்தில் தொடக்கக் கல்வி முடித்து, ஜெயங்கொண்டத்தில் உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். அப் பொழுது அங்கு சலூன் கடைகளில்விடு தலைபார்த்துள்ளேன்; படித்துள்ளேன். பிறகு விழுப்புரத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்தேன். விழுப்புரம் அருகில் வடகுச் சிப்பாளையம் என்ற ஊரில் ஓராசிரியர் பள்ளியில் சேர்ந்தேன். அந்தக் காலத்தில்ஜில்லா போர்டுபள்ளிகள் இருக்கும். அந்தப் பள்ளியில் அன்றையஜில்லா போர்டு பிரசிடெண்ட்கானூர் சாமிக் கண்ணு படையாட்சி உதவியால் பணியில் சேர்ந்தேன். வடகுச்சி பாளையம் கிராமத் தில் பணியில் இருக்கும் பொழுது, அடிக்கடி விழுப்புரம் செல்வேன். அங்குதான் முதன்முதலில் காசு கொடுத்துவிடுதலைபத்திரிகை வாங்கினேன்.

கேள்வி: திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்கள் எதிலாவது கலந்து கொண்டீர்களா?

பதில்: நான் விழுப்புரம் தாலுக்காவில் பணியாற்றும் பொழுது. விழுப்புரத்தில் கழகத் தோழர்கள் இராமச்சந்திரன், புலவர் சானகிராமன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டதுபிராமணாள்பெயர் அழிக்கும் போராட்டம் நடைபெற்றது. நானும் அதில் கலந்து கொண்ட பொழுது - “என்ன செய் கிறீர்கள்”? என்று தோழர்களும், போலீசா ரும் கேட்டனர். நான், ஆசிரியராக உள் ளேன் என்றவுடன், ‘வேலை போய்விடும்கைது ஆகாதீர்கள் என்றனர். நான் ஒதுங்கி வந்து விட்டேன். இது நடைபெற்றது சென் னையில்முரளி கபேபோராட்டத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியாகும். இதுதான் நான் முதன்முதலில் பார்த்தப் போராட்டமாகும்.

கேள்வி: அதன் பிறகு கழகத்தில் எவ்வாறு தீவிரப்பற்று - பிடிப்பு ஏற்பட்டது?

பதில்: 1960களில் நான் விழுப்புரம் வட்டத்திலிருந்து சிதம்பரம் வட்டத்திற்கு மாறுதல் பெற்று வந்துவிட்டேன். பூதங்குடி சோமசுந்தரம் என்பவர் மூலம், அன்றைய தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் கழக தலைவர் கு.கிருட்டிணசாமி அவர்களிடம் பழக்கம் ஏற்பட்டது. கு.கி அவர்களின் தொடர்பால் என் இயக்கப் பணிகளும் அதிகரித்தன. தமிழ்நாடு நீங்கலாக தேசப் பட எரிப்புப் போராட்டத்தில் கைது ஆக வில்லை, என்றாலும் படத்தை எரித்து சாம்பலை கவரில் போட்டு அரசாங்கத்திற்கு அனுப்பினேன். கழகத்தின் பிள்ளையார் உடைப்பு போன்ற போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு கைது ஆகவில்லை என்றாலும், அச் செயலை எல்லாம் செய் தேன். நான் மட்டுமல்ல; பல ஆசிரியர்களும் செய்தனர்.

நான் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை செல்லவில்லை. ஆனால் மாவட்டத் தலை வர் கு.கி அவர்களிடம் மாநாடுகளுக்கு, இயக்க நிகழ்ச்சிகளுக்கு, விடுதலை, உண்மை போன்ற ஏடுகளுக்கு நிறைய நன்கொடை சேர்த்துக் கொடுத்துள்ளேன். 1970ஆம் ஆண்டு உண்மை பத்திரிகை தொடங்கிய பொழுது ஆசிரியர்களிடம் நிறைய சந்தா சேர்த்து, சிதம்பரத்திற்கு பெரியார் வந்த பொழுது தந்தை பெரியா ரிடமே கொடுத்துள்ளேன். அப்போது உண்மை ஆண்டு சந்தா மூன்று ரூபாய் என்ற ஞாபகம் உள்ளது. இந்த ஞாபகம் சரியா? தவறா? தெரியவில்லை.

கேள்வி: தந்தை பெரியாருக்குப் பின் கழக செயல்பாடுகள் குறித்து ஆசிரியர் செயல்பாடுகள் குறித்து என்ன நினைக் கிறீர்கள்?

பதில்: தந்தை பெரியாருக்குப்பின் அன்னை மணியம்மையார் தலைமைப் பொறுப்பேற்றபொழுது, நான் கீரப்பாளை யத்தில் பணியாற்றினேன். அம்மா அவர் கள்  சிதம்பரம் வரும் பொழுதெல்லாம் கு.கி அவர்களின் இல்லத்தில் சந்தித்திருக்கின் றேன். அம்மாவிற்கு பிறகு ஆசிரியரின் தலைமை சிறப்பாக செயல்படுகிறது. என் போன்ற பெரியார் பெரும் தொண்டர்க ளுக்கு மரியாதை அதிகரித்துள்ளது. ஆசிரியர் தலைமை ஏற்ற பின்னர் நலி வடைந்த தோழர்களுக்கு மாதா மாதம் பண உதவி அளிப்பதை நான் மிகவும் பெரு மையாக எண்ணுகிறேன். அதுபோல - உடல் நலிவுற்ற பல தோழர்களுக்கு தலைமை நிலையத்தில் இருந்து மருத்துவ உதவி செய்வதை நினைத்து ஆசிரியரின் - தமிழர் தலைவரின் உதவும் மனப்பான் மையை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய அளவிலிருந்த பெரியார் கருத்து களை உலகம் முழுவதும் கொண்டு சேர்க் கும் ஆசிரியரின் பணி என் போன்றவர்களை வியப்படையச் செய்கிறது. பெரியார் வாழ்ந்த காலத்தைவிட - அக்கொள்கை இன்று மிகவும் ஏற்கப்படுகிறது - பரப்பப் படுகிறது என்றால் அது தவறல்ல; இதுதான் உண்மையாகும். பெரியார் பெருந்தொண் டர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம் ஆசிரியர் அவர்களை பாசத்தோடு விசா ரிக்கும் தன்மை கண்டு நெகிழ்ந்து போகி றேன். கழக நிகழ்ச்சிகளில்கடவுள் இல்லைஎன்ற வாசகம் அணிந்த கருஞ்சட்டை (கோட்) அணிவதை பெருமையாக நினைக் கிறேன்.

பெரியார் பெருந்தொண்டர் இராமதுரை ஆசிரியர் ஆவார். குடும்பமே சுயமரியாதை வழி வாழும் குடும்பமாகும். இவருக்கு சித்தார்த் தன் என்ற பொறியாளர் மகனும், இந்திரா என்ற ஒரு மகளும் உள்ளனர். தன் கண்களை புதுவை அரவிந்தன் கண் மருத் துவமனைக்கும் - உடலை அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும், மருத்துவக் கல்லூரிக்கும் கொடையாக வழங்க விண்ணப்பித்துள்ளார். இவர் ஆசி ரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் குமாரகுடியில் ஓமியோபதி மருத்துவம் பார்க்கும் மருத்துவமனையை நிறுவி பல ஏழைகளுக்கு மருத்துவம் பார்த்து தொண்டு செய்துள்ளார். தற்பொழுது உடல் நலிவுற்றதால் தன் மருத்துவப் பணியை விடுத்து இல்லத்தில் ஓய்வில் உள்ளார். தற்பொழுது சேத்தியாத்தோப்பு - கும்ப கோணம் மெயின் ரோடில் சோழதரம் என்ற ஊரில் - ‘சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வுஎன்று வாழ்கிறார். ‘விடுதலைபடிக்கச் சொல்லி கேட்கிறார் சோழதரத்தில் பெரியார் சிலை வைக்க வேண்டும் என்பது இவரின் இறுதி ஆசையாகும்.

நேர்காணல்: பூ.சி.இளங்கோவன்


No comments:

Post a Comment