கும்பகோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில், சட்டத்திற்கு புறம்பாக கோயில் கட்டுவதா?தடுத்து நிறுத்த ஆணையரிடம் அனைத்துக் கட்சியினர் கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 9, 2021

கும்பகோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில், சட்டத்திற்கு புறம்பாக கோயில் கட்டுவதா?தடுத்து நிறுத்த ஆணையரிடம் அனைத்துக் கட்சியினர் கோரிக்கை

குடந்தை, மார்ச் 9- கும்பகோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் மதச்சார்பற்ற நாட்டில் சட்ட விரோதமாக கோயில் கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி திராவிடர் கழக மாவட்டத் தலை வர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலை மையில் 8-.3.-2021 அன்று மாலை 4 மணியளவில் அனைத்துக் கட்சியினர் நகராட்சி ஆணையர் லெட் சுமியிடம் மனு அளித்தனர்.

கோவில் கட்டும் பணியை நிறுத்தி தற்போது உள்ள கட்ட டத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர் உடனடியாக நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

திராவிடர் கழகப் பொதுச்செய லாளர் இரா.ஜெயக்குமார், குடந்தை பெருநகர கழக செயலாளர் வழக் குரைஞர் பீ.இரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் மதியழகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் செல்வம், நீலப்புலிகள் கட்சித் தலைவர் .இளங்கோவன், .தி.மு. நகரச் செயலாளர் செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா ளர் செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் வழக்குரைஞர் நந்திவனம் பாலா உள்ளிட்ட அனைத்து கட்சியின ரும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment