முனைவர் "அதிரடி" க.அன்பழகன் இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் வாழ்த்துரை
சென்னை, மார்ச் 3- "திராவிடம் வெல்லும்" அர சியல் முழக்கம் அல்ல. அந்த உணர்வுகள் நம்மு டைய ரத்தத்தில் உறைந்த, கொள்கையில் நிறைந்த ஓர் உணர்வாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ந.அ.இளமதி- இரா.வீரமணி
கடந்த 24.1.2021 அன்று காலை பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் எஸ்.ஆர். திருமண மண்டபத்தில், திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழக நூலக இயக்குநர் நர்மதா ஆகியோரின் மகள் ந.அ.இள மதிக்கும், அத்திவெட்டி தி.மு.க. கிளைச் செயலாளர் வீ.இராமமூர்த்தி - இராணி ஆகியோரின் மகன் இரா.வீரமணிக்கும் நடைபெற்ற வாழ்க்கை இணை யேற்பு விழாவில் காணொலிமூலம் வாழ்த்துரை வழங்கினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் நடைபெறக்கூடிய அன்புச் செல்வர்கள் ந.அ. இளமதி - இரா.வீரமணி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு, மணவிழா நிகழ்வினை மேடையில் நடத்தவிருக்கக் கூடிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை நாடாளு மன்ற உறுப்பினரும், கொள்கை வீரருமான அன் பிற்குரிய அருமைச் சகோதரர் பழனிமாணிக்கம் அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துகின்ற திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் பணிக் குழு செயலாளர் எல்.கணேசன் அவர்களே,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் அன்பிற்குரிய சகோதரர் ஏனாதி பாலசுப்பிரமணியன் அவர்களே,
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்ற திராவிடர் கழக தஞ்சை மண்டலத் தலைவர் அய்யனார் அவர்களே,
மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்ற பட்டுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீரையன் அவர்களே, மன்னார்குடி மாவட்ட தலை வர் அருமை நண்பர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் அவர்களே, பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் நண்பர் சிதம்பரம் அவர்களே, மன்னார்குடி மாவட்ட செயலாளர் அருமைத் தோழர் கணேசன் அவர்களே, பக்கத்து மாவட்டங்களிலிருந்தும், ஏனைய பகுதிகளிலிருந்தும் வந்திருக்கக் கூடிய அருமை நண்பர்களே,
தஞ்சை மாவட்ட செயலாளர் அருமை நண்பர் அருணகிரி அவர்களே, கழகப் பொதுச்செயலாளர் அருமைத் தோழர் செயல்வீரர் ஜெயக்குமார் அவர்களே, மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் அவர்களே,
மற்றும் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களே, மனிதநேயர் ராஜ்குமார் அவர்களே, இயக்கப் பொறுப்பாளர்களான அருமைத் தோழர்களே, அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒருங்கிணைப் பாளராக இருக்கக்கூடிய கழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வன் அவர்களே, தோழர் அன் பழகன் அவர்களே,
நம்மையெல்லாம் வரவேற்ற கொள்கை வீரர், இந்தக் குடும்பத்திற்கு உரியவராக இருக்கக்கூடிய நர்மதாவின் வாழ்விணையர், இளமதியின் தந் தையார் அருமைத் தோழர் டாக்டர் அன்பழகன் அவர்களே,
மற்றும் அவருடைய சம்பந்தியராக இருக்கக் கூடிய இராமமூர்த்தி அவர்களே, இராணி அவர் களே,
திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழக அனைத்து இயக்கங்களைச் சார்ந்த நண்பர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் இல்லத்து மணவிழா -
எங்கள் இல்லத்து மணவிழா
இந்த மணவிழா நம் இல்லத்து மணவிழா - இன்னுங்கேட்டால், எங்கள் இல்லத்து மணவிழா என்று நாங்கள் எல்லோரும் பூரிப்போடும், பெரு மையோடும் நடத்தக்கூடிய ஒரு மணவிழாவாகும்.
இந்த மணவிழாவிற்கு நான் நேரிடையாக வந்து தலைமை தாங்கி, மணமக்களுக்கு வாழ்த்துரை கூறி, நேரில் அனைவரையும் சந்தித்து உரையாடி மகிழக்கூடிய ஒரு வாய்ப்பு கரோனா தொற்று காரணமாக இங்கே தவிர்க்கப்பட்டு இருக்கிறது. இது மிகுந்த வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.
எதைத் தவிர்க்க முடியாதோ -
அதனை ஏற்பதுதான் பகுத்தறிவு
ஆனாலும், எதைத் தவிர்க்க முடியாதோ - அதனை ஏற்பதுதான் பகுத்தறிவு - அதுதான் அனுபவமும்கூட!
அந்த அடிப்படையிலே, அருமை நண்பர்களே! நம்முடைய அருமை செல்வர்கள் ந.அ.இளமதி - இரா.வீரமணி ஆகியோரின் வாழ்க்கை இணை யேற்பு விழா நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், நேரில் வந்து நடத்தவேண்டும் என்பதற்காக - ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பே நிச்சயித்து, தேதி நிர்ணயித்த பிறகும்கூட, கரோனா தொற்று காரணமாக, இந்த மணவிழாவினை தள்ளி, தள்ளி வைத்தார்கள்.
இப்போதுகூட ஓரளவிற்கு நிலைமை சரியாகி விடும் என்றுதான் இந்தத் தேதியை வாங்கினார்கள். எனக்கு நேரில் கலந்துகொள்ளலாம் என்ற அவா வும், ஆசையும், துடிப்பும் இருந்தாலும், மருத்துவ நண்பர்களும், மற்றவர்களும் - நீங்கள் பயணங் களை மேற்கொள்ளவேண்டாம் - காணொலி மூலமாகவே நிகழ்ச்சிகளை சிறிது காலத்திற்கு நடத்துங்கள். நிலைமைகள் மாறட்டும்; உங்களது உடல்நிலை மிகவும் முக்கியம் என்று சொன்ன நேரத்தில்தான், நான் வீட்டுச் சிறைக்குள் வைக்கப் பட்டதைப்போல - அந்த உணர்வோடுதான் என்னுடைய கடமைகளை அன்றாடம் ஆற்றிக் கொண்டிருக்கின்றேன்.
அது எழுத்துப் பணியாக இருந்தாலும், பேச்சுப் பணியாக இருந்தாலும் - நம்முடைய தோழர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். கழகத் துணைத் தலை வரைப்போல, பொருளாளரைப் போல, பொதுச் செயலாளர்களைப் போல - நண்பர்கள் அந்தப் பணியை - சுமையைப் பகிர்ந்து கொண்டிருக் கிறார்கள் என்பது நமக்கு ஆறுதலைத் தருகிறது. அந்த வகையில், அந்தத் தோழர்களுக்கு என்னு டைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொள்கை உறவுகள்தான் நம்மையெல்லாம் இணைத்திருக்கிறது
நான் ஏற்கெனவே சொன்னதைப்போல, இந்த மணவிழா, நம்முடைய குடும்பத்து மணவிழா. கொள்கைக் குடும்பத்தைப்பற்றி நான் அடிக்கடி சொல்வது உங்கள் எல்லோருக்கும் நினைவில் இருக்கும்.
ரத்த உறவு என்பது இருக்கிறதே, அது ஆழ மானதுதான் - நீரின் கெட்டித்தன்மையைவிட, ரத்தத்தின் கெட்டித்தன்மை அதிகம் என்பது ஆங் கிலப் பழமொழி.
ஆனால், நம்மைப் பொறுத்தவரையில், ரத்தத் தைவிட அதிக கெட்டித்தன்மை உடையது எது என்றால், கொள்கை உறவுகள்தான். அந்தக் கொள்கை உறவுகள்தான் நம்மையெல்லாம் இணைத்திருக்கிறது.
இல்லையானால், நாம் என்ன மதம்? எந்த ஜாதி? என்பவையெல்லாம் தெரியாது; மிகப்பெரிய அளவில் நாம் ஒன்றுபட்ட ஒரு குடும்பமாக இருக்கிறோம். ஒரு பெருங்குடும்பம் -பெரியாரின் பெருங்குடும்பம். அறிவாசானால், நாம் அறிவுக் கொளுத்தப்பட்டவர்களுடைய ஒரு பெருங் குடும்பம் என்ற அளவில் நாம் எல்லோரும் ஒருங் கிணைந்திருக்கிறோம்.
அந்த வகையில், அருமை மணமகள் இளமதி அவர்களின் தந்தையான அன்பழகன் அவர்களா னாலும், தாய் நர்மதா அவர்களானாலும், நர்மதாவி னுடைய தந்தை அய்யா தம்பிக்கண்ணு அவர்கள், அரசு பணியாளராக இருந்த காலத்திலிருந்து அவரை நான் அறிவேன். அவர் இயக்க உணர்வாளர்.
இதில் மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்ன வென்றால், மணமகன் வீரமணி அவர்களுடைய பெற்றோர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய செயல் வீரராக அத்திவெட்டி தி.மு.க. கிளைச் செயலாளராக இருக்கக்கூடிய அருமைத் திருவாளர் இராமமூர்த்தி அவர்களும், இராணி அவர்களும் என்பதை அறிகின்றபொழுது எல்லை யற்ற மகிழ்ச்சியடைகின்றோம்.
மூன்றாவது தலைமுறையில், இயக்கக் கொள்கை பாரம்பரியமாக வந்துகொண்டிருக்கின்றது!
எனவே, இரண்டு அருமையான குடும்பங்கள் இணையக்கூடிய வாய்ப்பு இதன்மூலமாகக் கிடைத் திருக்கிறது.
தோழர்கள் அன்பழகன் - நர்மதா ஆகியோரின் மணவிழாவினை நான்தான் தலைமை தாங்கி நடத்தி வைத்தேன். இப்போது அவருடைய மகளுக் கும் நடத்தி வைக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கி றேன் என்று சொல்லும்பொழுது, உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.
எந்த அளவிற்கு மகிழ்ச்சிக்குரியது என்றால், நீண்ட காலம் நான் இருக்கிறேன் என்று சொல்வ தல்ல. அதேநேரத்தில், இந்தக் கொள்கை என்பது ஆயிரங்காலத்துப் பயிர்.
‘‘திராவிடம் வெல்லும்'' என்று நாம் சொல்கிறோம் என்றால், அது ஏதோ அரசியல் முழக்கம் அல்ல. மாறாக, அந்த உணர்வுகள் என்பது நம்முடைய ரத்தத்தில் உறைந்த, கொள்கையில் நிறைந்த ஓர் உணர்வாகும். அந்த உணர்வினுடைய அடிப்படையில்தான், அவர்களுடைய பெற்றோர், அதற்கடுத்த தலைமுறை - இது மூன்றாவது தலைமுறை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மூன்றாவது தலை முறையில், அந்தக் கொள்கை பாரம்பரியமாக வந்துகொண்டிருக்கின்றது.
தந்தையை மிஞ்சக்கூடிய பிள்ளைகள்; பிள்ளைகளை மிஞ்சக்கூடிய பேரப் பிள்ளைகள்!
அந்தப் பாரம்பரியம் என்பது சாதாரணமான தல்ல; இப்பொழுது சில பயித்தியக்காரர்கள் குடும் பம் அரசியல், குடும்ப வாரிசு என்றெல்லாம் சொல் கிறார்கள். சமுதாயக் கொள்கையில் குடும்பங்கள் இணைந்திருக்கவேண்டும். தந்தை ஒரு கொள்கை- தாய் ஒரு கொள்கை - பிள்ளைகள் ஒரு கொள்கை என்று இருப்பது விரும்பத்தக்கதல்ல. அதிலும்கூட, தந்தையை மிஞ்சக்கூடியவர்களாக பிள்ளைகள் இருக்கவேண்டும்; பிள்ளைகளை மிஞ்சக்கூடிய வர்களாக பேரப் பிள்ளைகள் இருக்கவேண்டும்.
இதைத்தான் திராவிடம் எதிர்பார்க்கிறது; இதுதான் சுயமரியாதை இயக்கம் எதிர்பார்க்கிறது. எப்படி ஒரு ஆலம் விழுது விழுந்தவுடன், அது ஆலமரமாக வளர்ந்து, அதிலே பல விழுதுகள் எல்லாம் மிகப்பெரிய அளவிற்கு வந்து - மரத்தை விட, விழுதுகள் பலமாக இருக்கின்றன என்று சொல்வதுதான் - அந்த மரம் ஆயிரங்காலத்து மரமாக இருப்பதற்கு அடையாளம்.
அடையாறு ஆலமரம் என்று எல்லோரும் சொல்கிறார்களே, அந்த அடையாறு ஆலமரத்தில், ஆணிவேரை விட, விழுதுகள் பலமாக அமைந் திருக்கின்றன என்று சொல்லக்கூடியதுதான் அதற் குப் பலம். அதுபோன்றதுதான் திராவிடர் இயக்கம் - அதுபோன்றதுதான் பெரியார் கொள்கை.
அருமை நண்பர் பட்டுக்கோட்டை சதாசிவம்
பெரியார் கொள்கை, ஒரு சமுதாயத்தையே புரட்டிப் போட்டு இருக்கிறது. ஒரு சமுதாய வாழ்வை மேன்மைப்படுத்தியிருக்கிறது. நன்றாக நினைத்துப் பாருங்கள், ஒரு எளிய கிராமம் அத்தி வெட்டி - ஒரு காலத்தில், ஆரம்பத்தில் நமக்கு எதிர்ப்பு இருந்த ஊர் அந்த ஊர். நண்பர் சதாசிவம் அவர்கள் பட்டுக்கோட்டை நகராட்சியில் பணியாற் றியவர். அவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முத்து தான் நம்முடைய பேராசிரியராக இருந்து, தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றிருக் கக்கூடிய நம்முடைய அதிரடி அன்பழகன் அவர்கள். பட்டுக் கோட்டை சதாசிவம் அவர்கள்தான், அதிரடி அன்பழகன் என்ற பெயரையும் வைத்தவர்.
எனக்கு எப்படி திராவிடமணி ஆசிரியரோ -அதுபோல, அன்பழகன் அவர்களை, பொதுவாழ்க் கையில், இயக்கத்தில் மாணவப் பருவத்தில் சிறப் பாக இணைத்த - அவரைத் தயாரித்த பெருமைக் குரியவர் - மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கக்கூடிய வளவன் என்று பெயர் வைத்துக் கொண்டிருந்த அருமை நண்பர் பட்டுக்கோட்டை சதாசிவம் அவர்களாவார்கள்.
(தொடரும்)
No comments:
Post a Comment