நாகர்கோயில், மார்ச் 2- கன்னி யாகுமரி சர்ச் ரோடு சந்திப் பில் பரப்புரை மேற்கொண்ட போது காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று (1.3.2021) பேசிய தாவது,
இரண்டு தகவல்களை உங் களிடம் சொல்ல கடமைப் பட்டுள்ளேன். முதலாவதாக டில்லியில் உள்ள மோடி அர சாங்கம் தமிழ் மொழிக்கோ, தமிழ் கலாசாரத்துக்கோ, தமிழ் நாகரிகத்துக்கோ மதிப்பு கொடுப்பதாக இல்லை. இங்கு இருக்கிற முதல்-அமைச்சர் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார். தமிழக முதல்-அமைச்சர் மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத் தாமல் மோடி சொல்வதை செய்பவராக இருப்பது நமக்கு வருத்தமளிக்கிறது. மோடி தொலைக்காட்சியை பார்த்து ரசிக்கிற சூழலில் தான் இருக்கிறார். அவர் தமி ழகத்தையும் ஒரு தொலைக் காட்சியை பார்ப்பது போன்றுதான் பார்க்கிறார். தொலைக்காட்சி அலைவரி சைகளை ரிமோட் கண்ட் ரோல்மூலம் மாற்றுவது போன்று எல்லாவற்றையும் மாற்றலாம் என்று நினைக் கிறார்.
தமிழக முதல்-அமைச்சர் மிகப்பெரிய ஊழல் பேர்வழி யாக இருக்கிறார். அவர் ஊழல் செய்ததால் சி.பி.அய்., வருமான வரித்துறை ஆகிய வற்றை வைத்து மோடி மிரட்டி வருகிறார். தமிழர் களை தவிர பிறர் தமிழகத்தில் ஆட்சி செய்ய முயற்சித்தால் அதை தமிழ் மக்கள் அனு மதிக்க மாட்டார்கள் என்பது வரலாறு. இந்த தேர்தலிலும் அதை நாம் பின்பற்ற வேண் டும். யார் தமிழ் மக்களை உண்மையாக முன் னிலைப் படுத்துகிறாரோ? யார் ஒரு தமிழராக நின்று செயல்படு கிறாரோ? அவர் தான் தமி ழகத்தின் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் உங்களுக்கு சொல்லிக்கொள்ள கடமைப் பட்டுள்ளேன்.
மோடியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தமிழ் கலாச் சாரத்தையும், மொழியையும் சிறுமைப்படுத்த நினைக் கிறார்கள். மோடி ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே வரலாறு என்று சொல் கிறார். அப்படி சொன்னால் தமிழ், பெங்காலி போன்ற மொழிகள் இந்திய மொழிகள் இல்லையா?. தமிழ் வரலாறு இந்திய வரலாறு இல்லையா? தமிழக கலாச்சாரம் இந்திய கலாச்சாரங்களில் ஒன்று இல் லையா? எனவே இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் நடைபெறக்கூடிய தேர்தலில் பிரதிபலிக்க வேண்டும். அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment