சட்டசபைக்கு குதிரையில் வந்து பாடம் புகட்டிய பெண் சட்டமன்ற உறுப்பினர்
ஜார்க்கண்ட், மார்ச் 10 ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இளம் வயது பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் குதிரையில் வந்த சம்பவம் ஆச் சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த மாநிலம் ஜார்க்கண்ட். இந்த ஜார்க்கண்ட் சட்டசபைக்கு குதிரையில் வந் துள்ளார் இளம் வயது பெண் சட்டமன்ற உறுப்பினரான அம்பா பிராசாத். கடந்த 2019ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பர்காவுன் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர். தற் போதுள்ள சட்டசபை உறுப் பினர்களில் மிகவும் இளைய வயதுடையவர் இவர்தான். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தக் குதிரையை பன்னாட்டு மகளிர் தினத்தன்று ஓய்வு பெற்ற கர்னல் ரவி ரத்தோர் எனக்கு பரிசாக வழங்கியுள்ளார் என்று கூறினார். மேலும் தான் குதிரையில் வரும் ஒளிப் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு கவிதை ஒன்றையும் எழுதியுள்ளார் அக் கவிதையில்
பெண்களைக் கட்டிப்போட நினைக்காதீர்கள்
நீளசங்கிலிகள் தேவைப்படும்
எங்களைக் கட்டிப்போட யாருக்கும் உரிமை இல்லை
முன்பு பெண்களை கட்டுக்குள் (அடிமைகளாக) வைத்திருந்தனர்
இப்போது எங்களுக்கு எந்த சங்கிலியையும் அறுத்தெறியும் வலிமை உண்டு
அவர்கள் எங்களை இனி கட்டிப் போட முடியாது.
ராம்தரி தின்கர் என்ற ஜார்கண்ட் மார்க்சிய தலைவரின் நூலிலிருந்து எடுத்த சிறிய வரியை கவிதையாக எழுதியிருந்தார்
மத்தியப் பிரதேசம் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் குதிரையில் ஏறியதால் கொலை செய்யப் பட்டுக்கொண்டு இருக்கும் போது அதே வகுப்பைச்சேர்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர் குதிரையில் ஏறி சட்டமன்றம் சென்று பலருக்கு பாடம் புகட்டி யுள்ளார்.
No comments:
Post a Comment