மாலினிகளுக்கு உணவு பரிமாறப்படும் நாளே உண்மையான மகளிர் உரிமை நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 6, 2021

மாலினிகளுக்கு உணவு பரிமாறப்படும் நாளே உண்மையான மகளிர் உரிமை நாள்

மரு..இர.மலர்விழி செல்வகுமார்,

MBBS DDVL

மூத்த உதவி மருத்துவர்

தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள்

மகளிர் தினம் குறித்த நாளிதழ் கட்டுரைகளை வாசித்துக் கொண்டு இருந்தேன். பெண்கள் குறித்து பல்வேறு சாதனை தலைப்புகளைப் படித்துக் கொண்டு இருக்கும் போது வீட்டு உதவியாளர் பெண் எனது மகள் ஓவியாவிற்குத் தோசை ஊட்டிக் கொண் டிருந்தாள்!!

எனது வீட்டில் உதவியாளர் பெண் - அவரை வேலைக்காரி என்று சொல்வதை நான் ஏற்கமாட்டேன் காரணம் எங்கள் வீட்டில் எல்லாமே அவர்தான், நான் எனது கணவர் இருவருமே நகரத்தின் நகர்வுகளோடு போட்டிப் போட்டு நகர்ந்துகொண்டு இருக்க, வீட்டை அலங்கரித்துக் கொண்டு இருக்கும் பெண் அவர். என்னம்மா இன்று மகளிர் உரிமை தினம், என்ன சிறப்பு என்று கேட்டேன், மெல்லிதாய் சிரித்து அமைதியானாள்!!

அந்த சிரிப்பிற்குப் பின் ஆயிரம் அர்த்தங்கள் - ஆயிரம் கதைகள்.

எனது குழந்தை நடக்க ஆரம்பித்த போது அவரை கவனித்துக்கொள்ள  எங்கள் வீட்டுக்கு வந்தவள் இவள். கடந்த நான்கரை ஆண்டுகளில் எங்களின் வீட் டில் ஒருவராய் மாறிப்போயிருக்கிறாள் இந்த பெண் என்று நினைத்தால் எனக்கே வியப்பாக இருக்கிறது!!

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அவள் குரலே வீடு முழுவதும்!!

அறுந்த பட்டன் தைப்பது முதல் பூ பறித்து கோர்ப்பது வரை - ரசம் தாளிப்பது முதல் கொத்தமல்லி விதை விதைப்பது வரை எங்களுக்குத் துணையாய் மாலினி வேண்டும்!!

பல நாட்கள் தாமதமாய் வந்தாலும் கோபிக்க மனம் வருவதில்லை எங்க ளுக்கு!!

எல்லாவற்றிற்கும் பதிலாய் முகத்தில் எப்பொழுதும் ஒரு புன்னகை!!

பல நேரம் என்னிடம் நண்பர்கள் கேட்பார்கள், வீடு பற்றிய சிந்தனை இல்லாமல் வேலையில் எப்படி இவ்வளவுஆக்டிவாகஇருக்கிறீர்கள் என்று.

அதற்கு விடையாக எங்கள் வீட்டில் உள்ள மாலினிதான் காரணம் என்பேன்

எவ்வளவு அலுவல்களில் நாங்கள் இருந்தாலும் மகளின் தேவைகள் அழ காய் நிறைவேற்றப்படும் மாலினியால்!!

நாம் பல வேலைகளில் கவனம் செலுத்த எமக்குத் தேவை நல்ல கணவர் மட்டுமல்ல, நல்ல உதவிப்பெண்ணும் தான்!! 

மாலினியின் குடும்பமும் பெரியது. இரண்டு குழந்தைகள், கணவர். அவரது தாய், தந்தை எனப் பெரிய குடும்பம் மாலினிக்கு!!

காலை 5-6 மணிக்கு ஆரம்பிக்கும் அவள் நாளில் பெரிதாய் அவள் கண வரின் பங்கு இருப்பதில்லை!!

ஓய்ந்து வீட்டிற்கு சென்று அடுத்த வீட்டுவேலையை  ஆரம்பிக்க ஒரு உதவியும் இன்றி மீண்டும் ஓட ஆரம்பிக் கிறாள் ஒரு சாவி கொடுக்காத பொம்மை யைப் போல்!

இந்த ஆண்டு மகளிர் உரிமை நாளிற்கு என் வாழ்வின் முக்கிய பெண்களுக்கு நன்றி கூற வேண்டும் என்று நினைத்த போது எனக்கு முதலில் நினைவுக்கு வத்ததுமாலினி

என்னம்மா மாலினி இந்த மகளிர்  தினத்துக்கு உனக்கு என்ன வேண்டும்?”

நீங்க வேறும்மா!!

நான் வீட்டிற்குச் சென்று அனைவ ருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து விட்டு, நான் சாப்பிட உட்காரும் போது எனக்கு ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொடுத்து என்னை அமைதியாகச் சாப் பிட விட்டாலே அதுவே எனக்கு ஒரு மகளிருக்கான உரிமைக் கொண்டாட்டம் தான் என்று பதில் கூறினார்.  இன்னும் உலகில் எத்தனையோ மாலினிகள் உள் ளனர். அவர்களுக்காக உணவு பரிமாறப் படும் நாளே உண்மையான மகளிர் உரிமை நாள்.

No comments:

Post a Comment