தந்தை பெரியார் 1949ஆம் ஆண்டு எடுத்த ஒரு தீர்க்கமான முடிவு - இன்றுவரை அவர் கண்ட இயக்கம் வளர்ந்து பயன் கொடுப்பதற்கு காரணமாகும். தந்தை பெரியார் மறைவிற்குப் பின், இந்த இயக்கம் சிதறுண்டு அழிந்து விடும் என்று நம் இன எதிரிகள் எக்காளமிட்டனர். அவர்களின் சிந்தனைகள் - ஆசைகள் அழிவ தற்குக் காரணமாக அமைந்தவர் அன்னை மணியம்மையார் என்றால் தவறல்ல.
1975ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலை கொண்டு
வந்து, நம் திராவிட இயக்கங் களை அழிக்க இந்திரா அம்மையார் ஆட்சி திட்டமிட்டு - திமுக, தி.க. தோழர்களை தமிழக மெங்கும் கைது செய்து சிறையில் அடைத்து கொடுமை செய்தது. தமிழர் தலைவர் ஆசிரியர் உள்ளிட்ட ஏராளமான நம் தோழர்கள் சிறைக் கொடுமைகளை ஏற்றனர். அன்றைக்கு பொதுச் செயலாளரான ஆசிரியர் சிறையில் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டிருந்தார். இன்றைய கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பூ.சி. நம்மோடு வந்து விட்டார் என்று கூறினார்.
அன்னை மணியம்மையார் என்னை மீண்டும், கழகத்தில் சேர்த்துக் கொண்டதாக 'விடுதலை'யில் செய்தி வெளியிட்டார். கவிஞர் உடனிருந்தார். இக்கால கட்டத்தில் அம்மா வுடன் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவருடன் சென்ற செய்திகளில் ஒரு நிகழ்வை பதிவு செய்தே ஆக வேண்டும். 'மிசா' கால கட்டத்தில், அன்னை மணியம்மையார் பல மாவட்டங்களுக்கும் சென்று கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தினார். திருமண நிகழ்ச்சி களை நடத்தி வந்தார்.
ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் - புதுச்சேரி முதலியார் பேட்டை காவல் நிலையம் அருகி லுள்ள, அன்றைய புதுவை தோழர்களில் ஒருவரான
கு. கலைமணி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. அப்பொழுது புதுவை கழகம் தனி மாவட்டமுமில்லை; மாநிலமுமில்லை; தென் னார்க்காடு மாவட்டத்தின் ஒரு கிளை ஆகும். அதுபோல காரைக்கால் தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
அன்றைய கூட்டத்தில், புதுவைத் தோழர்கள் ப. கனகலிங்கம், எஸ்.என். சாமி நாதன், வழக்குரைஞர் கோ. சாமிதுரை (தென் னார்க்காடு மாவட்ட பொருளாளர்) விழுப்புரம் வழக்குரைஞர் என். தயாநிதி, மாணவர் கழகம் துரை. சந்திரசேகரன் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். அம்மாவுடன் வேனில் புலவர் இமயவரம்பன், நான் மற்றும் சிலர் சென்றோம்.
அன்றைக்கு மாலையில் தொடங்கிய கலந் துரையாடல் முடிவடைய இரவு ஆகிவிட்டது. இந்த நேரத்தில் அம்மா எடுத்து வந்த 'வேன்' பழுதாகி விட்டது. இரவாகி விட்டதால் பழுதை நீக்க இயலவில்லை. மறுநாள் காலை தஞ்சையில் அம்மா தலைமையில் ஒரு வாழ்க்கை ஒப்பந்த விழா நடைபெறவிருந்தது. தோழர் கலைமணி வாடகை கார் ஏற்பாடு செய்ய முயற் சித்தார். திராவிடர் கழகத் தலைவர் மணியம் மையார் பயணம் செய்கிறார் என்றவுடன் எந்த வாகனமும் (கார்) வர மாட்டேன் என்று கூறி விட்டனர். 'மிசா' அந்த அளவிற்கு உச்சக்கட் டத்தில் இருந்தது. பிறகு புதுச்சேரியிலிருந்து பேருந்து மூலம் கடலூர் சென்று - திருப் பாப்புலியூர் ரயில் நிலையம் சென்றோம். அக்கால கட்டத்தில் இரவு 11.30 மணி அளவில் மதுரை செல்லும் 'ஜனதா எக்ஸ்பிரஸ்' வரும். அந்த ரயில் இரவு 12 மணியளவில் வந்தது. முன்பதிவு இல்லாத சாதாரண பெட்டியில் அம்மா, புலவர் இமயவரம்பன், நான் ஆகி யோர் ஏறினோம். அம்மா அவர்களைக் கண்டவுடன் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து கொண்டு, அம்மாவை அமர வைத்தனர். புலவர் அவர்களும், நானும் சிதம்பரம் வரை நின்று கொண்டு சென்று - அங்கு இடம் கிடைத்தவுடன் அமர்ந்தோம். அதிகாலை 3 மணியளவில் தஞ்சாவூர் சென்ற ரயிலிலிருந்து இறங்கி, குதிரை வண்டி மூலம் பழைய நெல்லுமண்டித் தெருவிலிருந்து அன்றைய தஞ்சை மாவட்ட செயலாளர் கா.மா. குப்புசாமி இல்லம் சேர்ந்தோம். தன் உடலை வருத்திக் கொண்டு, இயக்கத்தை காப்பதற்காக - பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்ததை எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு எந்தத் தலைவராவது இதுபோல செய் வார்களா? என் பதை ஒப்பீடு செய் தால் அம்மாவின் அருமை புரியும். இப்பொழுது உள் ளதைப் போல, 1976இல் கழகத் தோழர்களிடம் வாகன வசதி யில்லை.
மற்றொரு நிகழ்வையும் குறிப்பிட வேண்டும். 'மிசா' முடிந்து தமிழர் தலைவர் உள்ளிட்ட அனைவரும் வெளியே வந்தபின், 27.2.1977-இல் சிதம்பரத்தில் நானும், தோழர் கோவி. சுந்தரமூர்த்தியும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம். கழகத் தலைவர் அம்மாவும், பொதுச் செயலாளர் ஆசிரியர் அவர்களும் வருகை புரிந்தனர். நெய்வேலி இரா. கனகசபாபதி (அன்றைய மாவட்டச் செயலாளர்) நெய்வேலியிலிருந்து வந்து கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்தார். இவரும் 'மிசா' வில் சிறைசென்று வந்தவர்.
சிதம்பரத்தில் இன்றிருப்பதுபோல் விடு திகள் அப்பொழுது இல்லை. ஆசிரியர் அவர் களும், கல்லக்குறிச்சி வழக்குரைஞர்
கோ.சாமிதுரை அவர்களும் சிதம்பரம் பேருந்து நிலையம் பக்கத்திலிருந்த நகராட்சி தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். அம்மா அவர்கள் மட்டும் என் வீட்டில் தங்கியிருந்தார்கள்.
'இராவண லீலா' நடத்தி இந்தியாவையே தமிழகத்தை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த கொள்கை வீராங்கனை அம்மா அவர்கள்.
தந்தை பெரியார் தன் கொள்கை காப்பாள ராக மணியம்மையாரைத் தேர்வு செய்தது நூறு சதவிகிதம் வெற்றியடைந்தது.
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்"
- குறள் கருத்திற்கேற்ப அம்மா அவர்களும், அய்யாவின் கொள்கைக் காப்பாளராக தமிழர் தலைவர்ஆசிரியர் அவர்களை நியமித்துச் சென்றது. எத்துணைப் பொருத்தமான செயல் என்பதை எண்ணும் பொழுது - அம்மாவின் சிந்தனையும் அய்யாவின் சிந்தனைபோல வீண் போகவில்லை என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
No comments:
Post a Comment