இராங்கியத்தில் தந்தைபெரியார் சிலை மறைப்பு அகற்றம்: கழகத்தோழர்களின் முயற்சிக்கு வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 31, 2021

இராங்கியத்தில் தந்தைபெரியார் சிலை மறைப்பு அகற்றம்: கழகத்தோழர்களின் முயற்சிக்கு வெற்றி

புதுக்கோட்டை, மார்ச்31-புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்துள்ள இராங்கியத்தில்  உயர்நீதிமன்ற ஆணையை மீறி, தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பெரியார் சிலை  மறைப்புகொண்டு மூடப் பட்டது. ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டு அகற்றப்பட்டது.

பின்னர் மீண்டும் மூடியுள்ளனர். 29-3-2021 அன்று தகவல்அறிந்து புதுக் கோட்டை மாவட்டச் செயலாளர் .வீரப்பன், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் ,இளங்கோவன், ஏழுமலை ஆகிய தோழர்கள் நீதிமன்ற ஆணையை இணைத்து திருமயம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு வழங்கினர்.

கோரிக்கையை ஏற்று உடனடியாக பெரியார் சிலையை மூடி அமைக்கப்பட்டிருந்த மறைப்பு அகற்றப்பட்டது.

கழகப்பொறுப் பாளர்களின் முயற்சியை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.

No comments:

Post a Comment