ஏட்டு திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 2, 2021

ஏட்டு திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·             மோடி ஆட்சியில் இந்திய ஜனநாயகம் கேள்விக் குறியாகி உள்ளது எனவாஷிங்டன் போஸ்ட்பத்திரிகை விமர்சித்துள்ளது. அதேபோன்று, ‘எகானமிஸ்ட்பத்திரிகை, அரசை விமர்சிப்பவர்கள்மீது மோடி அரசின் நடவடிக்கை குறித்து கடும் விமர்சனத்தைத் தெரிவித்துள்ளது. முன்பு, பாப் பாடகர் தெரிவித்த ஒரு வரிக்கு, பொங்கி எழுந்த வெளியுறவு அமைச்சகமும், மோடி அரசும் இப்பத்திரிகைகளின் விமர்சனங் கள் குறித்து தற்போது மவுனம் காக்கின்றன என மூத்த பத்திரி கையாளர் ஆகார் படேல் குறிப்பிட்டுள்ளார்.

டெக்கான் கிரானிகல், சென்னை:

·             திருச்சியில் மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ள திமுக மாநாட்டில், தமிழகம் அடுத்த 10 ஆண்டுகளில் அடையப்போகும் வளர்ச்சி குறித்த திட்டத்தை திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.

·             தமிழ் மொழி, கலாச்சாரத்திற்கு எதிரான சக்திகளை அப்புறப்படுத்த தமிழ் மக்கள் வரும் தேர்தலில் தக்க பாடம் தந்து இந்தியாவிற்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·             நீட் தேர்வில் 'மார்க் ஷீட்'கள் / விடைத்தாள்கள் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து சிபி-சிஅய்டி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிசிஅய்டி சைபர் பாதுகாப்பு நிபுணர்களைக் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை அமைத்து, எந்தவொரு வழக்கையும் பதிவு செய்யாமல் குற்றச்சாட்டுகள் குறித்து பூர்வாங்க விசாரணையை மேற் கொள்ளும். மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி பி.புகழேந்தி கூறியுள்ளார்.

தி டெலிகிராப்:

· பார்ப்பனர்களின் நற்பண்புகளை புகழ்ந்து, சமூகத்தின் தலைமையில் பார்ப்பனர்களே இருக்க வேண்டும் என்று கூறிய கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரிஸ், தற்போது பணி ஓய்வு பெற்றவுடன் பாஜகவில் இணைந்துள்ளார்.

- குடந்தை கருணா

2.3.2021

No comments:

Post a Comment