கரோனா பரவலை தடுக்க தேர்தல் கூட்டங்களை கண்காணிக்க குழு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 3, 2021

கரோனா பரவலை தடுக்க தேர்தல் கூட்டங்களை கண்காணிக்க குழு

சென்னை, மார்ச் 3- தமிழகத் தில் சில வாரங்களாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட மாநிலங் களில், கரோனா அறிகுறியு டன், காய்ச்சலால் அனுமதிக் கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரு கிறது. அதேபோல், ஒருசில இடங்களில், டெங்கு காய்ச்ச லின் தீவிரம் உள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக் கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் நடத்தும் பொது கூட்டங்களினால், கரோனா பரவும் வாய்ப்புள்ளது. குறிப் பாக, அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்க ளில், சமூக இடைவெளி, முகக்கவசம் போன்றவை முறையாக பின்பற்றாவிடில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.  இதனால் தமிழகத்திலும் பாதிப்பு அதி கரிக்கும் என, சுகாதாரத்துறை கணித்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை உயர் அதிகாரி கூறிய தாவது:

தமிழகத்தில், சமூக இடை வெளி, முகக்கவசம் அணிவ தில் பொதுமக்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின் றனர். தற்போது பொதுக் கூட்டங்களிலும் இதே நிலை நீடிக்கும் என, எதிர்பார்க் கப்படுகிறது. எனவே, அந்தந்த சட்டசபை தொகுதிக்கு உட் பட்ட பகுதிகளில், தேர்தல் பிரச்சாரங்களை கண்காணிக் கும் வகையில், கரோனா தடுப்பு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும், அபராதம் மற்றும் சட்ட நடவடிக்யை தீவிரப் படுத்தவும் வலியுறுத்தி உள் ளோம். இதுகுறித்து, தேர்தல் ஆணையம், முறையான வழி காட்டுகள் வழங்கும் என, எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

No comments:

Post a Comment