சென்னை, மார்ச் 31- பாஜக மாநில மகளிர் அணி துணை செயலாளர் காயத்திரி தேவி சென்னையில் பத்திரிகையா ளர்களை சந்தித்தார். அப் போது, அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண்களையும், சமூ கத்தையும் இழிவாகப் பேசிய தாகக் கூறி, அவரை கண்டித்து நேற்று (30.3.2021) பொலம் பாக்கம் கிராமத்தினர் மற் றும் ஆதிதிராவிட கூட்ட மைப்பு சார்பில் பொலம் பாக்கத்தில் கல்லூரி எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் மேனாள் சட்டமன்ற உறுப் பினர் காயத்ரி தேவியை கண் டித்து முழக்கங்கள் எழுப்பி னர். இதனால் காவல்துறையினர் ஏராளமானோர் குவிக் கப்பட்டிருந்தனர். இருப்பி னும், கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டவர்கள் திடீ ரென மதுராந்தகம் சூனாம் பேடு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட னர். சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. அப்போது, போராட்டக்காரர்களிடம் சமரசம் பேசிய காவல்துறையினர், ‘மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மீது சட்ட விதி களுக்கு உட்பட்டு நடவ டிக்கை எடுக்கப்படும்’ என உறுதி அளித்ததன்பேரில் அவர் கள் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment