மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
திருவள்ளுவர் உருவத்தையே மாற்றி பார்ப்பனனாக சித்தரித்து பாடநூலில் புகுத்துவதன் மூலம் ஆரிய பார்ப்பனர்களே அறிவிற்சிறந்தோர் எனக் காட்ட முற்பட்டுள்ள நிலையை அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
மோடியின் அரசும், தமிழ்நாடு அரசும் தமி ழர்களின் பண்பாட்டை கேலி செய்து அழிக்கவே முயற்சிக்கின்றன. இந்நிலையில் ‘விடுதலை'யில் (22.2.2021) அறிக்கையைப் படித்து இந்த உணர்ச்சி தமிழர்களிடம் இல்லையே என்று வருந்தினேன்.
"திருவள்ளுவரை ஒரு புரோகிதப் பார்ப்பன ரைப் போல காவியுடனும், பூணூல், குடுமியுடனும் சித்தரிக்கப்பட்டுள்ள கொடுமை அரங்கேற்றப் பட்டுள்ளதைக் கண்டு நம் நெஞ்சம் கொதிக்கிறது.
மனுவாகவே திருவள்ளுவர் ஆக்கப்பட்டி ருப்பது கொடுமையிலும் கொடுமையல்லவா?
திராவிட இனவுணர்வாளர்களே, குறளை உலகெங்கும் பரப்பிட விரும்பும் குறள் அன்பர் களே நீங்கள் மவுனம் சாதிக்கலாமா?"
என்ற ஆசிரியரின் அறிக்கை வரிகளை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து கொதித்து எழ வேண்டாமா?
திருக்குறளில் பற்றுள்ளதைப் போல ஒரு திருக்குறளையும், ஆத்திச்சூடியில் ஓரிரு வரிக ளையும் காட்டி தமிழர்களை ஏமாற்றலாம் என்று மோடியும், புறநானூற்று வரிகளைக் குறிப்பிட்டுக் காட்டி தமிழர்களை ஏமாற்றலாம் என்று நிர்மலா சீதாராமனும் கனவு காண்பது நிச்சயம் நிறைவேறாது.
அண்ணாவாலும், தமிழறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருவள்ளுவர் உருவத்தை ஆரியக் கோலமாக்க முற்பட்டுள்ள ஆட்சியாளர் களை அகற்ற இந்தப் பெரியார் மண் ஆயத்தமாகி விட்டதை உணர வேண்டும்.
நீட் தேர்வு, இடஒதுக்கீடு போன்றவற்றிலும் அடம் பிடிக்கும் மத்திய அரசுக்குத் துணை போகும் மாநில அரசு மக்களால் வெறுக்கப் படப் போவது நிச்சயம்.
பெரியார் வெல்வார்! திராவிடம் வெல்லும்!
- ச.சோமசுந்தரம், தஞ்சாவூர்
No comments:
Post a Comment