இராயபுரம், மார்ச் 2- மன்னார் குடி கழக மாவட்டம், நீடா மங்கலம் ஒன்றியம் முன்னாள் ஒன்றியத்தலைவர் முது பெரும் பெரியார் பெருந் தொண்டர் இராயபுரம் பரம சிவம் அவர்களின் படத் திறப்பு 27-2-2021 சனி காலை 10 மணியளவில் இராய புரத்தில் நடைபெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் நிகழ் விற்கு தலைமையேற்று படத் தினை திறந்துவைத்து நினை வேந்தல் உரையாற்றினார்
நிகழ்வில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, திராவிடர் கழக மாநில விவசாய தொழி லாளரணி செயலாளர் இரா. கோபால், மாவட்ட செயலா ளர் கோ.கணேசன், மண்டல செயலாளர் க.குருசாமி, மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், கழக பேச்சாளர்கள் இராம.அன் பழகன், வழக்குரைஞர் சு.சிங் காரவேலர், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரனி தலை வர் தங்க.வீரமணி, நீடாமங் கலம் ஒன்றிய பெருந்தலைவர் சோம.செந்தமிழ்செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் ராணி சுந்தர், ஊராட்சி மன்ற தலைவர் க.பாஸ்கர், காங் கிரஸ் கட்சி பொறுப்பாளர் நீலன்அசோகன், மு.ஊ.ம. தலைவர் வெங்கடாசலம், ஆசிரியர் ராதா, ஆசிரியர் ரவிச்சந்திரன், சந்திரமோகன் ஆகியோர் நினைவேந்தல் உரை யாற்றினார்கள், பொதுக்குழு உறுப்பினர் சிவஞானம், நீடாமங்கலம் நகரத் தலைவர் பி.எஸ்.ஆர். அமிர்தராஜ்,
மாநில பகுத்தறிவு ஆசிரி யரணி அமைப்பாளர் சி.இர மேஷ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வை.கவுத மன், மாவட்ட செயலாளர் உ.கல்யாணசுந்தரம், ஒன்றியத் தலைவர் பொன்னுசாமி, ஒன் றிய செயலாளர் சக்திவேல், ஒரத்தநாடு பெரியார்நகர் அ. உத்திராபதி, எடமேலையூர் வீராச்சாமி, லெட்சுமணன், மன்னை.சித்து, மன்னார்குடி நகர செயலாளர் ராமதாஸ், குடந்தை ராணிகுருசாமி, நீடாமங்கலம் அய்யப்பன், சிவதாசு, பிரகாசு, புள்ளவரா யன்குடிக்காடு கலியமூர்த்தி, மன்னை ஒன்றியத்தலைவர் தமிழ்செல்வன், இராயபுரம் மதி உள்ளிட்ட ஏராளமான கழகத்தோழர்களும், பொது மக்களும், உறவினர்களும் கலந்துகொண்டு வீரவணக் கம் செலுத்தினர்.
No comments:
Post a Comment