ஏட்டு திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 5, 2021

ஏட்டு திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமானவரி, சி.பி.அய்., கலால் வரி ஆகிய துறைகளை தான் சொல்வது போல் ஆடவும், அதற்கு அரசுக்கு ஆதரவான ஊடகங்கள் அமைதிக் காப்பதும், இவர்களைக் கொண்டு வேளாண் சட்டங்களையும் அரசின் திட்டங் களை எதிர்ப்பவர்களை மோடி அரசு ஒடுக்க முயல்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     உள்ளாட்சித் துறைகளின் பஞ்சாயத்துப்  பதவிகளுக்கு ஓபிசி பிரிவினர்க்கான இட ஒதுக்கீடு அரசின் சட்டங்களால் தரப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரைப் போல அரசமைப்புச் சட்டத்தின்படி அல்ல. ஆகவே, ஓபிசி பிரிவினர்க்கான இட ஒதுக்கீடு ஒட்டு மொத்த 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தி டெலிகிராப்:

·     மோடியே வேலை கொடு என டிவிட்டரில் ஒரே நாளில் 50 லட்சம் இளைஞர்கள் பதிவிட்டுள்ளனர். மத்திய அரசின் பணிகளுக் கான விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும், மூன்று ஆண்டுகளாகியும் இன்னமும் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்பதைக் காரணம் காட்டி இளைஞர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

·     நாட்டில் பொருளாதார வீழ்ச்சி, இந்திய எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு, நடைபெற உள்ள மாநிலத் தேர்தல்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் அல்லது மாற்றாக, மாநில அரசுகள் விருப்பத்திற்கு விட வேண்டும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சாமி மோடி அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

பி.பி.சி. நியூஸ் தமிழ்:

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஆறு தொகுதிகளிலும் வி.சி.. தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமா வளவன் தெரிவித்திருக்கிறார்.

- குடந்தை கருணா

5.3.2021

No comments:

Post a Comment