ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 8, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     அதிமுக வெற்றி பெற்றால், ஆட்சியில் பாஜகவும் பங்கு பெறும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

·     தற்போது பிரதமர் மோடியின் தேர்தல் உரையில் குஜராத் மாடல் பற்றியெல்லாம் எதுவும் கூறுவதில்லை. மத வேறுபாட்டை பெரிதுபடுத்தி ஆட்சியைப் பிடிக்க பாஜக நினைக்கிறது. மேற்கு வங்கத் தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது என தலை யங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     திமுக ஆட்சிக்கு வந்ததும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, ஆண்டுக்கு பத்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போவதாக திமுக தலைவர் மு.. ஸ்டாலின் உறுதி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மேற்கு வங்கத் தேர்தலில் தொடர்ந்து பேசிட பிரதமர் மோடிக்கு நேரம் இருக்கிறது. ஆனால், டில்லியருகே நூறு நாட்களாக போராடும் விவசாயிகளைச் சந்திக்க நேரம் இல்லை என தேசிய காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சாடியுள்ளார்.

தி ஹிந்து:

·     பாஜக ஒரு விஷச் செடி. தமிழ் நாட்டில் அதனைப் பரவ விடக்கூடாது என காங்கிரஸ் தலைவர் .சிதம்பரம் பேச்சு.

தி டெலிகிராப்:

·     மேற்கு வங்க தேர்தல் பரப்புரையில், பெட்ரோல், காஸ் விலை ஏற்றம் குறித்து மத்திய அரசை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்தார்.

பி.பி.சி. நியூஸ் தமிழ்:

·     நவீன தமிழகத்தை உருவாக்கியது தி.மு.. ஆட்சிதான். இந்த அடிப்படை கட்டமைப்பை சிதைத்தது .தி.மு.. ஆட்சி. அடிப்படை கட்டமைப்பை சிதைப்பது, தி.மு.. உருவாக்கிவைத்த திட்டங்களை குலைப்பதுதான் அந்த ஆட்சியின் பழக்கமாக இருக்கிறது. ஊழலுக்கு உதாரணம் .தி.மு.. ஆட்சிதான். இந்தியாவிலேயே பதவியிலிருக் கும் போதே, ஊழலுக்காக தண்டிக்கப்பட்டு பதவி விலகியவர் ஜெய லலிதா. மே 2ஆம் தேதி அமையும் ஆட்சி பெரியார் விரும்பிய சமூக நீதி ஆட்சியாக, அறிஞர் அண்ணா விரும்பிய மாநில சுயாட்சிக்கான ஆட்சியாக, கலைஞருக்கான நவீன மேம்பாட்டு ஆட்சியாக, காமராஜரின் கல்வி வளர்ச்சி ஆட்சியாக ஜீவா விரும்பிய சமத்துவ ஆட்சியாக அமையும் என திருச்சி பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு..ஸ்டாலின் பேச்சு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·     அய்ந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் டில்லியில் மாற்றத்தை உருவாக்கும். மோடி - ஷா கூட்டணி வெற்றி பெற்றால், மேற்கு வங்கம் துண்டாடப்படும் என மம்தா பானர்ஜி பேச்சு.

- குடந்தை கருணா

8.3.2021

No comments:

Post a Comment