தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு
இந்திய தேர்தல் ஆணைய சட்டவிதிகளின்படி ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியி டும் வேட்பாளர்கள், தங்க ளது வாக்குச்சாவடி முகவர்க ளாக தலா இருவரை நியமித் துக் கொள்ளலாம். அவர்கள், வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைமுறைகள் சரியாக நடைபெறுகிறதா? கள்ள ஓட்டுப் போடுகிறார் களா? என்பனவற்றை கண் காணிப்பார்கள். முகவராக நியமிக்கப்படும் நபர், குறிப் பிட்ட வாக்குச்சாவடி அமைந் துள்ள பகுதியின் வாக்காள ராக இருக்கவேண்டும் என் பது விதிமுறை. நீண்ட கால மாக இதே விதிமுறை கடைப் பிடிக்கப்பட்டு வந்த நிலை யில், தற்போது இந்த விதியை தலைமை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.
அதன்படி, குறிப்பிட்ட தொகுதிக்குள் எந்த வாக்குச் சாவடிக்குட்பட்ட பகுதியி லும் வசிக்கும் வாக்காளராக இருப்பவர்கள் வாக்குச் சாவடியின் முகவர்களாக வேட்பாளர்களால் நியமிக் கப்படலாம் என்று மாற்றப் பட்டுள்ளது. இந்த நடை முறையை மேற்குவங்கத்தில் கடந்த 27ஆம் தேதி நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் அமல்படுத்தி உள்ளது.
தலை மை தேர்தல் ஆணையம், நாடாளுமன்றத்தில் அறிவிக் காமலும், அரசியல் கட்சிகளு டன் ஆலோசனை நடத்தா மலும், தன்னிச்சையாக விதி களை திருத்தி உள்ளதாக அர சியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேற்குவங்கத்தில் நடந்த முதல் கட்டத் தேர்த லில் பல இடங்களில் உள்ளூர் முகவர்களை காட்டிலும், வெளி யாட்கள் வாக்குச் சாவடி முக வர்களாக நியமிக் கப்பட்ட னர். இவ்வாறு நியமிக்கப்பட் டவர்கள் பெரும் பாலும் பாஜக முகவர்களாக இருந்தனர்.
பாஜகவுக்காக தலைமை தேர்தல் ஆணையம் மேற்கண் டவாறு விதியை மாற்றியுள் ளதாக திரிணாமுல் காங் கிரஸ் குற்றம்சாட்டி வருகி றது. இதேநடைமுறை தமிழ கம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களி லும் நடைபெற வாய்ப்புள் ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திரிணாமுல் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர் சுதிப் பந்தோபாத்யாயா டில்லியில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி ஆரிஸ் அப்தாபிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், ‘தேர்தல் ஆணை யத்தின் இந்த நடவடிக்கை யானது பாஜகவுக்கு சாதக மானதாகவும், பாரபட்சமான தாகவும் உள்ளது. தங்களுக்கு பலம் இல்லாத இடங்களில் வெளியாட்களை முகவர் களாக பாஜக நியமித்து வாக் காளர்களை மிரட்டி உள் ளது. எனவே, தேர்தல் ஆணையம் தனது உத்தரவை திரும்ப பெற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. மேற்குவங்கத்தில் தேர் தல் ஆணையம் நடைமுறைப் படுத்தியுள்ள இந்த நடை முறை யானது மற்ற மாநில தேர்தல் களிலும் அமல்படுத் தப்பட வாய்ப்புள்ளதால் எதிர்க்கட் சிகளுக்கு திரிணாமுல் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக தேர்தல் பணிக்கு கேரளாவை சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளும் நியமிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக கேரள அய்.ஏ.எஸ். அதிகாரி களான சிறீராம் வெங்கட்ரா மன், ஆஷிஸ் கே.யூசுப் ஆகி யோர் தமிழக தேர்தல் பணிக் காக நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் சிறீராம் வெங்கட் ராமன்மீது மலையாள பத்தி ரிகை நிருபர் பஷீரை காரால் மோதிக் கொன்ற வழக்குள் ளது. ஆஷிஸ் கே.யூசுப் அய்.ஏ. எஸ். தேர்வுக்காக போலி ஆவ ணங்களை தாக்கல் செய்த தாக எழுந்த குற்றச் சாட்டு தொடர்பான வழக்கு உள்ளது.
எனவே 2 பேரையும் தேர்தல் பணிக்கு நியமிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணை யத்தில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து 2 பேரையும் தேர்தல் ஆணையம் திரும்ப அழைத்துள்ளது. அவர்க ளுக்கு பதிலாக அய்.ஏ.எஸ். அதிகாரிகளான ஜாபர் மாலிக், ஷர்மிளா மேரி ஜோசப் ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment