அடிமைச் சின்னமாக கருதப்படும் டை அணியாததால் வெளியேற்றப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 6, 2021

அடிமைச் சின்னமாக கருதப்படும் டை அணியாததால் வெளியேற்றப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

வெள்ளையர் ஆதிக்கத்தின் போது அடிமை களை இழுத்துவர கழுத்தில் கயிறுகளைக் கட்டி தொங்கவிடுவார்கள். இதனால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கரும் புத்தோட்டங்களுக்கு பணி புரிய அழைத்து வரப்பட்டதை நினைவில் கொண்டு அங்கு வாழும் கருப்பின மற்றும் ஆசிய மக்கள் கழுத்துப் பட்டைகளை அணிய மறுத்து வருகின்றனர்.

 இந்த நிலையில் நியூசிலாந்தின் மவுரி (Maori)  கட்சியின் தலைவர் ராவிரி வைடிடி (Rawiri Waititi), இவரது மூதாதை

யர்கள் ஆசிய நாடுகள் ஒன்றிலிருந்து அடி மைப்பணிக்காக அழைத்துவரப்பட்டவர் கள்.

இவர் தற்போது நாடாளுமன்ற உறுப் பினராக உள்ளார். நியூசிலாந்து நாடாளு மன்றத்தைப் பொறுத்தவரை அங்கு ஆடை யோடு டை அணிவது கட்டாயம் ஆகும். இந்த நிலையில்  நாடாளுமன்றத்தில் பேசத்துவங்கிய போது நாடாளுமன்ற அவைத்தலைவர் மவுரி கட்சித்தலைவர்  ராவிரியிடம் கழுத்துப் பட்டை அணிந்து கொண்டு பேசத்துவங்குங்கள் என்று கூறி னார். ஆனால் அவர் அது அடிமைகளின் சின்னம், ஆகவே நான் அணியமாட்டேன் என்று கூறவே அவரைப் பேச அனுமதிக்க வில்லை.

'வெள்ளையர் ஆதிக்கத்தின் அடிமைக் கயிறு' என்று டையை வருணித்த அவர், தமது பாரம்பரிய  மவுரி கலாச்சார உடையில் இருந்ததாகக் கூறினார்.  தாம் நடத்தப்பட்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார் ராவிரி. கழுத்து வார் அணியா விட்டால், நாடாளுமன்றத்திலிருந்து வெளி யேற்றப்படுவார் என்று சென்ற ஆண்டும் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கழுத்து வார் கட்டாயம் அணிய வேண் டும் என்ற விதியை மாற்ற தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவிப்பதாக நாடாளு மன்ற அவைத் தலைவர் சொன்னார். ஆனால் மற்ற உறுப்பினர்கள் அந்த விதியை ஆதரிப்பதால் அது தொடர்ந்து பின்பற்றப்படுவதாய் அவர் கூறினார்.

நியூசிலாந்து மக்கள் கழுத்து வார்களைப் பற்றி கவலைப்படவில்லை என்று கூறிய பிரதமர் ஜசிண்டா ஆர்டன், அதைவிட மற்ற பெரிய பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்தவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment