மகளிர் தினத்தையொட்டி - விவசாயிகள் போராட்டத்தை வழி நடத்திய பெண்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 10, 2021

மகளிர் தினத்தையொட்டி - விவசாயிகள் போராட்டத்தை வழி நடத்திய பெண்கள்

புதுடில்லி, மார்ச்10-  சர்வதேச மகளிர் தினத்தையொட்டி 8.3.2021 அன்று டில்லி எல்லைகளில் பல்லயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்தினர்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டில்லி யில் பல்வேறு மாநில விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இதற்காக சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டில்லி எல்லைகளில் பல்லாயிரக்கணக் கானோர் குவிந்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தை முடி வுக்கு கொண்டு வரும் வகையில் விவசாயிகளுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. இத னால் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினம் 8.3.2021 அன்று நாடு முழுவதும் அனுசரிக்கப் பட்டது. இதையொட்டி விவசாயி களின் இந்த போராட்டக் களங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் பெண் விவசாயிகள் குவிந்து போராட்டத்தை வழிநடத்தினர். குறிப்பாக விவசாயிகளின் போராட்ட மேடைகளை நிர்வகித்தல், பெண் பேச்சாளர்களை கொண்டு பெண்களுக்கு ஆதரவாக வும், விவசாய சட்டங்களை எதிர்த்தும் உரையாற்றுதல், போராட்டக்காரர் களுக்கான உணவு உள்ளிட்ட அத்தி யாவசியப் பொருட்களை வழங்குதல், பாதுகாப்புப் பணி களை மேற்கொள் ளுதல் என அனைத்து பணிகளையும் நேற்று பெண்களே மேற்கொண்டனர். இதைப் போல சிங்கு உள்ளிட்ட போராட்டக்களங்களில் ஏராள மான பெண்கள் பங்கேற்ற பேரணியும் நடந் தது. இந்த நிகழ்வுகளால் போராட்டக் களங்களில்ஆயிரக்கணக்கான பெண்களை காண முடிந்தது. இவ் வாறு விவசாயிகளின் போராட்டக் களத்தில் ஏராளமான பெண்கள் பங் கேற்றதை தொடர்ந்து, போராட்டத் தில் பெண் விவசாயிகளின் எண் ணிக்கை அதிகரித்து வருவதாக விவசாய தலை வர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment