டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டது.
டெக்கான் கிரானிகல், சென்னை:
· அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பாஜக ஆட்சி இயங்குகிறது. நடைபெற உள்ள அய்ந்து மாநில தேர்தல்கள், பாஜகவின் வீழ்ச்சியை உறுதிப்படுத்தும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· விவசாயிகளின் நூறாவது நாள் போராட்டத்தையொட்டி, கே.எம்.பி. எல்லையில் நூற்றுக்கணக்கான டிராக்டர்களின் பேரணி நடந்தது.
· மகளிர் தினத்தையொட்டி, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 40000 பெண்கள் டில்லி விவசாயப் போராட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டனர்.
· பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேச விவசாயிகள் போராட்டக் களத்தில் உள்ளனர். அய்ந்து மாநிலத் தேர்தலில் மக்கள் ஜன நாயகத்தைக் காத்திடும் வாய்ப்பு பெற்றுள்ளனர். பொருளாதார வீழ்ச்சியையும், பறிபோகும் சுதந்திரத்தையும் தடுத்தாக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கருத்திட்டுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· தேர்தல் நடைபெறும் அய்ந்து மாநிலங்களில் கரோனா தடுப்பூசிக்கான சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்கிட தேர்தல் ஆணையம் உத்தரவு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
· அண்ணா பல்கலைக்கழக எம்.டெக் முது நிலைப்படிப்பில் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு
நடைமுறப்படுத்தியுள்ளது.
· கார்ப்பரேட் மயம், தனியார்மயத்தை எதிர்த்து வருகிற மார்ச் 13-ஆம் தேதி ரயில் பாதையில் மறியல் செய்யப்போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.
- குடந்தை கருணா
7.3.2021
No comments:
Post a Comment