நான் இந்நூலை எழுதினேன் என்றாலும் இதை எழுத என்னைப் பணித்தவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் தான். இதற்காக பெரியார் திடல் நூலகம் ஆய்வகம் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. நூலகர் உட்பட பெரியார் திடலில் உள்ள பலரும் எனக்குப் பேருதவி புரிந்தார்கள். அவர்களுக்கெல்லாம் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோரும் சேர்ந்துதான் இந்நூலை எழுதினோம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.
இந்நூலை எழுதுவதற்காக ஏராளமான தமிழ், ஆங்கில நூல்களை படித்தேன். பெரியார் திரைப்பட இயக்குநர் ஞான.இராசசேகரன் அவர்கள் பெரியார் பெயரில் இன்னும் மூன்று படங்கள் எடுக்கலாம் என்றார். பெரியார் பற்றி இன்னும் அய்ந்து நூல்களை எழுதலாம் - அவ்வளவு இருக்கிறது.
இந்த நூல் இப்பொழுது தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். சமூகவலைத் தளங்களிலும் கூட எழுதுகிறார்கள். அவற்றைப் பார்த்த போதுதான் - இந்த நூல் அவசியம் தேவை என்பதை நான் உணர்ந்தேன் - அறிந்தேன்.
பெரியார் ஒரு நாத்திகர் - பார்ப்பன எதிர்ப்பாளர் என்ற முறையில் மட்டுமே பார்க்கிறார்கள். அதையும் தாண்டி பெரியார் இருக்கிறார். அந்த அடிப்படையில் தான் இந்நூலை எழுதினேன் என்றார்.
பெரியார் புத்தக விற்பனை மேலாளர் த.க.நடராசன் நன்றி கூறிட பிற்பகல் 5.15 மணியளவில் நூல் வெளியீட்டு விழா சீரும் சிறப்புமாக நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment