வேலைவாய்ப்பு-தொழில் வளர்ச்சி பற்றி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 31, 2021

வேலைவாய்ப்பு-தொழில் வளர்ச்சி பற்றி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

 * திறமையும், வலிமையும், அர்ப்பணிப்பும் உள்ள இளைஞர்கள் தமிழகத்தில் பெருமளவில் இருக்கிறார்கள். இவர்களுடைய ஆற்றலையும், ஆர்வத்தையும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிற அதே வேளையில், அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கு வழி செய்யும் வகையில், தமிழக மக்கள் முன்பு ஒரு புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தக் காங்கிரஸ் கட்சி விழைகிறது.

* தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஆண்டு ஒன்றுக்கு பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்றுள்ள சிறந்த 500 இளைஞர்கள் - இளம்பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உணவு மற்றும் உறைவிடமும் வழங்கி மூன்று ஆண்டுகளுக்குக் குடிமைப் பணிகள் பயிற்சி வழங்குவது, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, போக்குவரத்து முறைப்படுத்துதல், தேசிய பேரிடர் மீட்புப் பணிகளில் பயிற்சி, அடிப்படைக் குற்றவியல் சட்டங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள், சமூக நலப்பணிகள் போன்றவற்றில் போதிய பயிற்சிகளை அளித்து, மூன்றாண்டு பயிற்சிகள் முடிந்தவுடன் அவர்களைத் தமிழகக் காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலர்களாகப் பணியமர்த்துவது, பயிற்சிக் காலங்களில் முதலாமாண்டு மாதம் ரூ.1000, இரண்டாமாண்டு ரூ.2000, மூன்றாமாண்டு ரூ.3000 என உதவித் தொகை வழங்குவது என்ற புதிய திட்டத்தைக் காங்கிரஸ் செயல்படுத்த விழைகிறது.  

No comments:

Post a Comment