தாழ்த்தப்பட்டோரிடம் தபால் தரமாட்டார்கள்!
தந்தை பெரியார் அவர்களும், அவர் கள் கண்ட சுயமரியாதை இயக்கமும் பட்ட அரும்பாட்டின் காரணமாகவேதான் இன்றைக்குத் தமிழரினம் குறிப்பாக, ஆதிதிராவிடப் பெருமக்கள் ‘மஞ்சள்குளிக்க’ முடிகிறது. அய்யா அவர்கள் இயக்கம் காண்பதற்கு முன்பு இந்நாடு இருந்த நிலை இன்றைய இளைஞர் தலைமுறையினர் அறிந்திட வாய்ப்புகள் இல்லை. அதனாலேதான் அய்யா அவர் களது தொண்டின் மேன்மையை உண ராது அரசியல் வெட்டுக்கிளிகளாகப் பச்சை கண்ட இடம் பறந்து குதிக்கிறார்கள்.
உதாரணத்திற்கு ஒன்றை குறிப்பிட்டுக் காட்டுகிறேன். எங்கள் வில்லிவாக்கத்தை எடுத்துக் கொண்டால், ‘உயர்ஜாதிக்காரர் கள்’ வசிக்கும் இடம் என்று கருதப்பட்ட சன்னதி தெரு, மாடவீதிகள் பக்கம் ஆதி திராவிடர்கள் நடந்து போகவே முடியாது. முதலாவது உலக யுத்தம் நடந்தபோது. ரஜ்பட், ஈரான், பாக்தாத் முதலிய வெளி நாடுகளுக்குச் சென்றிருந்த ஆதிதிரா விடத் தோழர்கள் ஆவலோடு தங்கள் வீடுகளுக்கு எழுதி அனுப்பும் கடிதங் களை, சேரிக்குள் வந்தால் தீட்டுப்பட்டு விடும் என்று கருதி, தபால்காரன் ஆஞ்சநேயர் மண்டபத்தின் அருகே போட்டு விட்டுப் போய்விடுவான். அவன் போட்டு விட்டு வெகு தூரம் போனதற்குப் பின்னா லேயே அந்தத் தபால்களை வேகவேக மாக எடுத்து வருவார்கள். இந்த நிலை 35 ஆண்டுகளுக்கு முன்பு.
இன்று? தபால்காரன் என்ன தாசில் தாரிலிருந்து ஆளுநர் வரை வீடு தேடி வருகிறார்கள். எல்லாம் பெரியார் என் னும் பகுத்தறிவுத் தாய்மழையின் கரு ணையால் அல்லவா? ஆதிதிராவிடத் திருமகனே! இதை நீ மறந்து விடாதே! நீ தின்னும் உணவு அவர் போட்டது; கட்டும் வேட்டி அவர் கொடுத்தது; உன் பிள்ளை படிக்கும் புத்தகம் அவர் தந்தது மறந்து விடாதே! நன்றி கொன்று விடா அனுப வித்த உள்ளம் பேசுகிறேன்.
- அ.தியாகராசன்,
வில்லிவாக்கம், சென்னை-49
(உண்மை, 1.8.1974)
No comments:
Post a Comment