மத்திய பா.ஜ.க. அரசு மீது மன்மோகன் சிங் சாடல்
திருவனந்தபுரம்,மார்ச்3- 2016ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மோசமான பண மதிப்பு நீக்க முடிவால், நாட்டில் வேலையின்மை அதிகரித்து அமைப்புச் சாரா துறையே சீர் குலைந்துள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அரசை கடுமையாகச் சாடினார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் சார்பில், 'பிரதீக்சா 2030' என்ற தலைப்பில் பொருளாதாரக் கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கின் நோக்கம், கேரள மாநிலத்தை வளப்படுத்துவதற் கான ஆலோசனை வழங்கி, முன்னெடுத்துச் செல்வ
தாகும்.
காணொலி வாயிலாக காங் கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள் ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பேசியதாவது:
பொருளாதாரத்தை சீர மைக்க அரசு தற்காலிகமான நடவடிக்கைகளைத்தான் எடுத் துள்ளது. சிறு மற்றும் நடுத்தரத் துறைகளுக்குக் கடன் கிடைக் காமல் கடுமையாக பாதிக்கப்படு கிறார்கள். அமைப்பு சாரா துறை யில் வேலையின்மை மிகவும் உயர்ந்த அளவில் அதிகரித்து அந்த துறையையே சீரழித்து விட்டது. இதற்கு காரணம், கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு எடுத்த மோசமான பணமதிப்பு நீக்க நடவடிக்கை தான்.
கேரளா மற்றும் பல்வேறு மாநில அரசு நிதிப்பற்றாக்குறை காரணமாக அதிகமாகக் கடன் பெற வேண்டிய சூழல் ஏற்பட் டதால், அவற்றின் நிதிநிலை மையே மோசமடைந்துவிட்டன. எதிர்கால பட்ஜெட்டுக்கு தேவை யான நிதியை ஒதுக்க முடியாமல் பெரிய கடன் சுமையில் இருக் கின்றன .
அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அரசியல் கொள்கை மற்றும் இந்தியப் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு மூலக்கல்லாக இருப்பது கூட் டாட்சியும், மாநில அரசுகளுடன் தொடர் ஆலோசனையும்தான்.ஆனால், தற்போது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசில் இந்த அம்சங்களை நான் காணவில்லை.
கேரளாவில் சமூக வாழ்க்கைத் தரம் உயர்ந்தது, மற்ற துறை களுக்கும் அதிகமான முக்கியத் துவம் வழங்குவது அவசியம். ஏராளமான தடைகள் மாநி லத்துக்கு இருந்தது, அந்த தடை களை கேரள மாநிலம் கடந்து விட்டது. கடந்த சில ஆண்டு களாக உலகளவில் பொருளாத ராத்தில் பெரும் மந்தநிலை நிலவு கிறது. இதில் கேரள மாநிலமும் பாதிக்கப்பட்டது.
இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்தார்.
No comments:
Post a Comment