ஊழல் ஒழிப்பின் லட்சணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 31, 2021

ஊழல் ஒழிப்பின் லட்சணம்!

 சொத்துக்குவிப்பு வழக்கு:.தி.மு.. முன்னாள் எம்எல்ஏக்கு 4 ஆண்டு சிறை

விழுப்புரம், மார்ச் 31- அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பரமசிவம் குற்றவாளி என விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

1991 மற்றும்  1996ஆம் ஆண்டுகளில் மறைந்த முன் னாள் முதல்வர் ஜெயலலிதா வின் ஆட்சியின்போது சின்ன சேலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பரமசிவம் இருந்தார். இதற் கிடையே, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த் தாக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள் ளது. அதன்படி, வருமானத் திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் பரமசிவம் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி, பரமசிவனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.33 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகை செலுத்தாத பட்சத் தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள் ளார். மேலும், 1991 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் அவர் தனது மகன்கள் பெயரில் வாங்கிய சொத்துகள் முழு வதும் அரசுடைமையாக்கப் படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது பொது மக்கள் மற்றும் முதன்முறை வாக்காளர்கள் மத்தியில் தாக் கத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment