பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப் பட்ட பெண்களிடம் ‘கன்னித்தன்மை பரி சோதனைகள்’ செய்யப்படுவதைப் பாகிஸ் தானின் லாகூர் உயர்நீதிமன்றம் தடை செய்துள்ளது.
இருவிரல் பரிசோதனை உட்பட கன்னித்தன்மை பரிசோதனைகள் அரச மைப்புக்கு முரணானவை என்று லாகூர் மேல் நீதிமன்ற நீதிபதி ஆயிஷா ஏ மாலிக் தீர்ப்பளித்துள்ளார்.
பாகிஸ்தானில் பாலியல் வன்முறை களுக்கு ஆளான பெண்களுக்கு கன்னித் தன்மை சோதனை செய்யப்படுகிறது.
அய்மன் எனும் பெண்ணுறுப்பின் தொடக்கத்தில் இருக்கும் மெல்லிய சவ்வு போன்ற திசுப்பகுதியை ஆய்வு செய்வார் கள். இந்த மெல்லிய சவ்வு கிழிந்திருந்தால், அந்த பெண் கன்னித்தன்மை இழந்தவர் எனத் தீர்மானிப்பார்கள்.
மற்றொரு முறையில், மருத்துவர் இரண்டு விரல்களைப் பெண்ணின் பிறப்பு உறுப்புக்குள் செருகி பரிசோதனை செய் வார்கள். இது இருவிரல் சோதனை எனக் குறிப்பிடப்படுகிறது.இந்த இரண்டு முறை களின் மூலம், வெளிப்படையாக, ஒரு பெண் கன்னித்தன்மை கொண்டவரா இல் லையா என்பதைத் தீர்மானிக்கின்றனர்.
உலகில் குறைந்தபட்சம் 20 நாடுகளில் இச்சோதனை முறை அமுலில் உள்ளதாக அய்.நா.வும் உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ளன. இச் சோதனை முறை விஞ்ஞானப் பூர்வமானது அல்ல எனவும் இச்சோதனை மனித உரிமை மீறல் எனவும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.
இந்நிலையில் மேற்படி கன்னித்தன்மை சோதனைகள் பாதிக்கப்பட்ட பெண்களுக் குப் பாரபட்சமானவை எனவும், இச்சோத னைகளுக்கு தடயவியல் சான்றுகள் எதுவும் இல்லை எனவும் நீதிபதி ஆயிஷா ஏ மாலிக் தீர்ப்பளித்துள்ளார்.
இச்சோதனைகள் பாகிஸ்தானின் அரசி யலமைப்புக்கு முரணானது எனவும், பாலி யல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்கொடு மைகளால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் கன்னித்தன்மை சோதனை மேற்கொள்ளப் படாமலிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தானின் மத்திய மற்றும் மாகாண அரசுகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கன்னித்தன்மை சோதனைகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் தொடர்பில் இத்தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. இத்தீர்ப்புக்கு முன்னதாக, லாகூரைத் தலைநகராகக் கொண்ட பஞ்சாப் மாகாணத்தின் மாகாண அரசு, மேற்படி இருவிரல் சோதனைக்கு தடையுத்தரவு பிறப்பித்திருந்தது,
அதன்படி, “பாதிக்கப்பட்டவர்களிடம் இருவிரல் சோதனை நடத்தப்படக் கூடாது, அதேவேளை, மருத்துவப் பரிசோதனைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தின் உத் தரவின் பேரில் மாத்திரம், 2006 ஆம் ஆண்டின் பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எழுத்து மூல அனுமதி பெற்ற பின்னர் மேற்கொள்ளப்படலாம், பாதிக்கப்பட்டவர் சிறுமி என்றால் சோதனைக்கு அவரின் பாதுகாவலரின் எழுத்து மூல அனுமதி பெறப்பட வேண்டும்” எனவும் பஞ்சாப் மாகாண அரசு கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கி இருந்தது..
“பாதிக்கப்பட்டவர்கள் பரிசோத னைக்கு மறுப்புத் தெரிவித்தமைக்காக அவருக்கான சிகிச்சை நிராகரிக்கப்படக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட பெண் மருத் துவ அதிகாரி ஒருவரால் சோதனை நடத் தப்பட வேண்டும். கிளெய்ஸ்டர் கீன கிளாஸ் றொட் பயன்படுத்தி சோதனை மேற்கொள்ளலாம். இருவிரல் சோதனை நடத்தப்படக் கூடாது” என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் லாகூர் உயர் நீதிமன்ற மானது இருவிரல் சோதனை உட்பட கன்னித்தன்மை பரிசோதனைகளைத் தடை செய்துள்ளது. இத் தீர்ப்பை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வரவேற்று உள்ளனர்.
No comments:
Post a Comment