PERIYAR E.V. RAMASAMY A MAN AHEAD OF HIS TIME என்ற தலைப்பில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளேட்டில் பத்திரிகையாளராக இருக்கும் பாபு ஜெயகுமார் அவர்களால் எழுதப்பட்டு, எமரால்டு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் வெளியிட, பெரியார் திரைப்பட இயக்குநர் ஞான இராசசேகரன் (அய்.ஏ.எஸ். ஓய்வு) பெற்றுக் கொண்டார். முனைவர் கே.சுபாஷினி (ஜெர்மனி), திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், ஆடிட்டர் ஆர்.இராமச்சந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
ஆய்வாளர் - எழுத்தாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம். பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன், வெங்கடேசன் (ப.க.), ஓசூர் கண்மணி, கழக மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் மணியம்மை, அமைப்பாளர் வழக்குரைஞர் மதிவதனி, தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் முத்தையன், செயலாளர் நாத்திகன், தொண்டறம், அறிவொளி காணொலி இயக்குநர் ப.சேரலாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆதி மொழி, பொறியாளர்
கரிகாலன் மற்றும் ஏராளமான தோழர்கள் பெற்றுக் கொண்டனர்.
ஆங்கில நூலோடு, 'பெரியார்' திரைக்கதை - ஞான இராச சேகரன் (அய்.ஏ.எஸ். ஓய்வு)
DRAVIDIAN WORTHIES-I - Sir C.Sankaran Nair
பெரியார் பதித்த கொள்கைத் தடங்கள் (கி. வீரமணி)
அண்டத்தைப் பார்க்கலாம் வாங்க - (பெரியார் பிஞ்சு வெளியீடு) ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன், நூலாசிரியர் பாபு ஜெயகுமார், இயக்குநர் ஞான.இராசசேகரன், முனைவர் சுபாஷினி, எமரால்டு பதிப்பக உரிமையாளர் கோ.ஒளிவண்ணன் ஆகியோருக்குச் சால்வை அணிவித்து தமிழர் தலைவர் சிறப்பு செய்தார்.
No comments:
Post a Comment