அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி அய்தராபாத்தில் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 3, 2021

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி அய்தராபாத்தில் ஆர்ப்பாட்டம்

அய்தராபாத், மார்ச் 3- அகில இந்திய பிற் படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங் கானா மாநில பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின்சார்பில் 28.2.2021 அன்று அய்தராபாத் இந்திரா சவுக் பகு தியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவர் நாடா ளுமன்ற மேனாள் உறுப்பினர் வி.அனு மந்தராவ், பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி மற்றும்தேசிய, தெலங்கானா மாநில கூட்டமைப்பின் பொறுப்பா ளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட உரையாற்றினார்கள். கிரீமிலேயர் முறையை ஒழிக்க வேண்டும். ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும். பிற்படுத்தப்பட்டவர் களுக்கு தனியே அமைச்சகம் உருவாக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங் களை தனியார் மயமாக்கக்கூடாது. பிற் படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக் கீட்டை 52 விழுக்காடாக விரிவுபடுத்த வேண்டும். மருத்துவக்கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு உரிய இடஒதுக்கீடு நடை முறைப்படுத்தப்பட வேண்டும். நீதித் துறை, தனியார் துறைகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

மண்டல் அறிக் கையின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பின் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத் தப்பட்டது.

No comments:

Post a Comment