வேலூர், மார்ச் 7- வேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் திராவிடம் வெல்லும் சிறப்புக் கூட்டம் 26-2-2021 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடை பெற்றது
வேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் வி.சி.தமிழ் நேசன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் கவிஞர் தூயவன் (எ) ம.ஜ.சந்தீப் வரவேற்புரை மற்றும் இணைப்புரை வழங்கினார். மாநில திராவிட மாணவர் கழக அமைப் பாளர் இரா.செந்தூரப்பாண்டியன், வேலூர் மண்டல திராவிடர் மாண வர் கழகச் செயலாளர் க.வெங்கடே சன் ஆகியோர் தொடக்கவுரை ஆற்றி னர்.
இந்நிகழ்வில் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகி யோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துக் கொண்டனர்.
கழகச் சொற்பொழிவாளரும், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப் பாளருமான முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரை யாற்றினார்.
இதில் வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன், வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார், மாநில மகளிரணி அமைப்பாளர் ந.தேன் மொழி, மாவட்ட ப.க. தலைவர் இர. அன்பரசன், மாவட்ட ப.க. செயலா ளர் மா.அழகிரிதாசன், மாநகர தலை வர் உ.விஸ்வநாதன், மாநகர செய லாளர் ந.சந்திரசேகரன், மாவட்ட மகளிரணி தலைவர் ச.ஈஸ்வரி, தி.மு.க பேச்சாளர்கள் கவிஞர் த.பாரி, கவிஞர் வி.ஏ.அன்பு, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.லதா, அறிவுவழி காணொலி நிகழ்வின் நெறியாளர் தாமோதரன், தமிழ்ச்செல்வன், மாவட்ட தொழிலாளரணி அமைப் பாளர் பொ.தயாளன், சென்னை மண்டல மகளிரணி செயலாளர் ஓவியா அன்புமொழி, நகர தலைவர் சி.சாந்தகுமார், நகர அமைப்பாளர் வி.மோகன், விடுதலை வாசகர் வட் டத் தலைவர் வ.இரவிக்குமார், மாண வர் கழகத் தோழர்கள் செந்தமிழ் இன்மொழி, செந்தமிழ் யாழினி, வி.சி.சங்கநிதி, ஜீவிதா சந்திரமதி, அன்புச்செல்வன், இர.மோகனபிரியங்கா, வ.பெருமாள், கழகத் தோழர் பாலசுப்பிரமணியம் மற்றும் திரளா னோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் மாணவர் கழகத்தின் சார்பில் பய னாடை அணிவிக்கப்பட்டது.
பிறந்தநாள் கண்ட மாவட்ட தலைவர் சிவகுமார் அவர்களுக்கும், திருமண நாள் கண்ட பெரியார் பெருந்தொண்டர்கள் சடகோபன் - ஈஸ்வரி ஆகியோருக்கும் புதிதாக கழகத்தில் இணைந்த மருத்துவர் சிவா அவர்களுக்கும், ஓவியா - மோகன் ராஜ் இணையர் ஈன்றெடுத்த மழலை டார்வின் ஆகியோருக்குச் சிறப்பு செய்யப்பட்டது
நகரத் தலைவர் சாந்தகுமார் விடுதலை, உண்மை ஓராண்டு சந்தா வழங்கினார். வருகை புரிந்த அனைவ ருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட் டது. நிறைவில் மாவட்ட திராவிட மாணவர் கழகச் செயலாளர் வீ.தமிழ்ச் செல்வன் நன்றியுரை வழங்கினார்.
No comments:
Post a Comment