அமித்ஷாமீது அவதூறு வழக்கு தொடருவேன்நாராயணசாமி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 2, 2021

அமித்ஷாமீது அவதூறு வழக்கு தொடருவேன்நாராயணசாமி அறிவிப்பு

சென்னை, மார்ச் 2- புதுவை முன் னாள் முதல்அமைச்சர் நாரா யணசாமி சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று (1.3.2021) செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் அப்போதைய துணை நிலை ஆளுநர் கிரண்பேடியுடன் சுமூகமான நிலை இருந்தது. அதன் பிறகு நிர்வாகத்தில் தலையிட தொடங்கினார். கோப்புகளை தாமதப்படுத்துவது, நிராகரிப் பது, வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டைபோடுவது, தன்னிச்சையாக அதிகாரி களை அழைத்து உத்தரவு போடுவது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடு பட்டார்.

மேற்படி தலைமையிலான மத்திய அரசு எங்கள் அரசை முடக்குவதற்காக ஆளுநரைத் தூண்டிவிட்டது. இதைத் தொடர்ந்துகிரண்பேடியே திரும்பி போங்கள்என்று போராடினோம்.

அதன் காரணமாக மாற் றப்பட்டார். இப்போது தமி ழிசை ஆளுநர் பொறுப்புக்கு வந்துள்ளார். ஆட்சி கவிழ்ப்பு மும்முரமாக நடந்தது.

அமித்ஷா புதுவைக்கு வந்து என்.ஆர்.காங்கிரஸ் மற் றும் .தி.மு..வினரை சந் தித்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சி யில் ஈடுபட்டார். சென்னையில் இருந்தும் பா.ஜனதா தலை வர்கள் வந்து முகாமிட்டனர். பெங்களூரில் இருந்து பண மூட்டைகள் கொண்டு வரப் பட்டு சட்டமன்ற உறுப்பினர் கள் விலை பேசப்பட்டனர்.

எனக்கு அடுத்த அமைச்ச ராக இருந்த நமச்சிவாயம் ஒரு வருடமாக பா.ஜனதாவுடன் தொடர்பில் இருந்தார். அதே போல் தீபாய்ந்தான் சட்ட மன்ற உறுப்பினரும் அவர்க ளுடன் தொடர்பில் இருந் தார்.

அவர்கள் மீதான வருமான வரி வழக்குகளை தள்ளுபடி செய்வதாக உத்தரவாதம் கொடுத்தும், சிலரை மிரட்டி யும், ஒரு சிலருக்கு பணம் கொடுத்தும் விலைக்கு வாங்கி னார்கள். அப்படி இருந்தும் எங்கள் ஆட்சிக்கு பெரும் பான்மை இருந்தது.

ஆனால் நியமன உறுப் பினர்கள் 3 பேருக்கும் ஓட் டுரிமை இருப்பதாக கூறி கவிழ்த்தார்கள். இது மோடி யும், அமித்ஷாவும் திட்ட மிட்டு நடத்தியது. 7 ஆண்டு களுக்கு முன்பு மன்மோகன் சிங்கால் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்ட விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலைக்கு மோடி இப்போது அடிக்கல் நாட்டியுள்ளார்.

காரைக்காலுக்கு வந்த அமித்ஷா, மோடியிடம் இருந்து ரூ.15 ஆயிரம் கோடி நிதி வந்ததாகவும், ஒரு பகு தியை நான் எடுத்துக்கொண்டு மீதியை காந்தி குடும்பத்திற்கு கொடுத்துவிட்டதாகவும் அபாண்டமான குற்றச் சாட்டை சுமத்தி இருக்கிறார்.

இதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அமித்ஷா மீது கிரிமினல் மற்றும் அவ தூறு வழக்கு தொடருவேன். அவர் என்ன வழக்கு போட் டாலும் நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment