ஆபத்தை விலைக்கு வாங்கவேண்டாம்!
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கரோனா தொற்று குறையவில்லை :
- மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் அறிவிப்பு
‘கரோனா' முற்றிலும் ஒழிந்துவிட்டது என்பது போன்ற மனப்பான்மையில் அலட்சியமாகப் பொதுமக்கள் நடந்து கொள்வது ஆபத்தை விலைக்கு வாங்குவதாகும், எச்சரிக்கை!
பறிமுதல் செய்யப்பட வேண்டியது எதை?
கண்டெய்னர் லாரிகளில் இராமநாதபுரத்திற்குக் கொண்டு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - ஜெயலலிதா உருவம் பொறித்த புத்தகப் பைகள் பறிமுதல்.
ஆட்சியைப் பறிமுதல் செய்ய மக்கள் துடித்துக் கொண்டுள்ளனரே!
ஏற்பார்களா பாசிஸ்டுகள்?
அரசுடன் மாறுபட்ட கருத்து தேசத் துரோகம் ஆகாது : - உச்சநீதிமன்றம் கருத்து.
‘பாசிஸ்டுகள்' இதனை ஏற்றுக் கொள்வார்களா?
‘பூச்சாண்டி!'
திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பா.ஜ.க.வில் இணைந்தார்.
பிள்ளைப் பிடிக்கும் ‘பூச்சாண்டி'பற்றி நாம் ஏற்கெனவே கேள்விப்பட்டதுதானே!
கைப்பொம்மை என்ன செய்யும்?
நீதிபதிகளைக் கீழ்த்தரமாக ஏசிய பா.ஜ.க. ராஜா மீது நீதிமன்றம் கூறியும், இதுவரை குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யாத காவல்துறையை எச்சரித்து வழக்கை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
காவல்துறை என்ன செய்யும்? பா.ஜ.க.வின் கைப் பொம்மையாக தலையாட்டும் ஆட்சி அல்லவா தமிழ்நாட்டில்!
ஆளைப் பிடி!
பிரதமர் மோடியுடன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ‘கிரிக்கெட்'டுக்காரர் கங்குலி முடிவு செய்வார்.
ஆளைப்பிடி - காலைப் பிடி!
‘தலை'நகரில் விழுந்த இடி!
டில்லி மாநகராட்சியில் 5 வார்டு இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி 4 இடங்களையும், காங்கிரசார் ஓர் இடத்தையும் பிடித்து பா.ஜ.க. பூஜ்ஜியம்.
தலைநகரமே தலைப்பை எடுத்துக் கொடுத்துவிட்டதோ!
வதைக்கும் - சிதைக்கும்!
லாரி வாடகைக் கட்டணம் 30 விழுக்காடு உயர்வு!
விலைவாசி உயர்வு என்னும் லாரி மக்களின்மீது ஏறிக் கொல்லும்!
விலைவாசி - ‘வாசிகளை' வதைக்கும் - அதுவே ஆளும் கட்சியையும் சிதைக்கும்!
தேர்தல் ஆணையம் ஒப்பம்!
ஒரு செட் பூரி ரூ.45. நெய் தோசை ரூ.80. தேர்தல் செலவு கணக்கு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
நாட்டின் விலைவாசி பீதியைக் கிளப்புகிறது - தேர்தல் ஆணையமே ஒப்புதல் வாக்குமூலம்!
‘நான் வளர்கிறேனே அப்பா!' என்ற விளம்பரம்தான் நினைவிற்கு வருகிறது.
ஒரே ஒரு அமைச்சர்தானா?
‘ஆபாச வீடியோ!' - கருநாடக அமைச்சர் ராஜினாமா?
ஒரே ஒரு அமைச்சர்தானா? ஆட்சியே ‘அருவருக்கத்தக்க' வகையில்தானே இருக்கிறது.
மக்கள் ஒட்டு மொத்தமாகவே ராஜினாமா செய்ய வைப்பார்கள்!
No comments:
Post a Comment