உயர்நீதிமன்ற ஆணையை எடுத்துக்காட்டி கழகத் தோழர்கள் புகார்
திருப்பூர்,மார்ச்.8- எந்த வகையிலும் யாரும் தந்தை பெரியார் சிலையை மறைக்கவோ,மூடவோ கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் திருப்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள தந்தை பெரியார் சிலையை மறைத்து கூண்டு அமைத்தும், சாக் கால் மூடியும் மாநகராட்சி அதி காரிகள் மற்றும் காவல்துறையினர் நீதிமன்ற ஆணையை தொடர்ந்து அவமதித்து அத்துமீறி வருகின்றனர்.
திருப்பூரில் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள் நடைபெற்ற அன்றைய கோவை ஜில்லா செங் குந்தர் மாநாட்டில் தான் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணா வும் முதன் முதலாக சந்தித்து கொண் டனர். இந்த அரிய சந்திப்பை நினைவு கூரும் வகையில் சந்திப்பு நிகழ்ந்த திருப்பூர் ரயில் நிலையம் எதிரில் கடந்த18.10.2008 அன்று திராவிட முன்னேற்ற கழக ஆட்சி யில் தந்தை பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவுக்கும் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட் டது. அன்று தொட்டு இன்றுவரை பொதுமக்கள்,அரசியல் கட்சியி னர், அரசியல் சாராத இயக்கத்த வர்கள் என அனைவரும் இந்த இருபெரும் தலைவர்களின் சிலை களை
போற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தந்தை பெரியார் சிலையை யாரும் எந்த விதத்திலும் மூடவோ, மறைக்கவோ கூடாது என திரா விடர் கழகத்தின் சார்பில் துணை தலைவர் கவிஞர்.கலிபூங் குன்றன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து (MP NO.1 of 2011- IN WP. 7618/2011) ஆணை பெற்றுள் ளார். இதை மய்யப்படுத்தி நாடெங் கிலும் தந்தை பெரியார் சிலைக ளுக்கு அமைக்கப்பட்ட கூண்டுகள் அகற்றப்பட்டு வருகிறது. தஞ்சை யில் அனைத்து கட்சிகள் சார்பில் மிகப் பெரிய போராட்டமே நடை பெற்றுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பெரியார்,அண்ணா சிலை கள் அழுக்கு சாக்கு சுற்றிக் கட்டப் பட்டும்,எம்.ஜி.ஆர் சிலை சலவை செய்யப்பட்ட வெள்ளை துணி யால் போர்த்தப்பட்டும் பாரபட் சத்துடன் கூடிய அளவில்
திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளால் இங் கிதமற்ற நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது. பெரியார் சிலை மறைக்கப்பட்டது குறித்து உடன டியாக திருப்பூர் மாவட்ட கழகத் தின் சார்பில் அன்றைய திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரிடம் சென்னை உயர்நீதிமன்ற ஆணையை எடுத்துக்காட்டி சட்டப்படி புகார் அளிக்கப்பட்டதன் பேரில் உடன டியாக தந்தை பெரியார் சிலையை மூடியிருந்த சாக்கு அகற்றப்பட்டது.
தற்போது கடந்த ஜனவரி 15, 16 ஆகிய தேதிகளில் திருப்பூர் இரயில் நிலையம் எதிரிலுள்ள பெரியார்-அண்ணா சிலைக்கு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அத்துமீறல் குறித்து சிலைகள் அமைந்த இடம் சார்ந்த துறை அதிகாரியான திருப்பூர் மாநக ராட்சி ஆணையாளர் அவர்களை "விடுதலை" நாளிதழ் சார்பாக
தொடர்பு கொண்டுகேட்டபோது; இதுகுறித்து தனக்கு எந்த தகவலும் தெரியாது எனவும் உதவி ஆணை யாளரை கலந்துகொண்டு சொல் வதாக தெரிவித்தார்.அதன் பிறகு சுமார் 15 நிமிடம் கழித்து திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையாளர் அவர்கள் நமது செய்தியாளரை தொடர்பு கொண்டு நாங்கள் இந்த கூண்டை அமைக்கவில்லை! சிலை களுக்கு கூண்டு அமைக்கக் கோரி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திருப்பூர் மாநகராட்சிக்கு தாக்கீது கொடுத்ததன் பேரில் சிலை பரா மரிப்பாளர்கள் மூலம் இந்த கூண்டு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
தந்தை பெரியார் சிலையை மூடியுள்ள கூண்டை அகற்ற வலி யுறுத்தி பெரியாரிய உணர்வாளர் கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 17.01.2021 அன்று திருப்பூர் வடக்கு காவல்நிலையத்திலும் 18.01.2021 அன்று திருப்பூர் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் புகார் மனு கொடுக் கப்பட்டது. ஆனால் இன்றுவரை கூண்டு அகற்றப்படவில்லை, மாறாக முன்பு அமைக்கப்பட்ட கூண்டுக்கு மேல் சாக்கு போர்த்தி மீண்டும் தந்தை பெரியார் சிலை கடந்த 05.03.2021 அன்று தேர்தல் விதிமுறை என்ற பெயரில் மூடப் பட்டுள்ளது.
இந்த தொடர் நீதிமன்ற அவம திப்பு குறித்து 06.03.2021 அன்று திருப்பூர் மாவட்ட கழகத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளருக்கு புகார் தெரிவிக் கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநக ராட்சி உதவி ஆணையாளர் புகாரை பெற்றுக்கொண்டு மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதில் திருப்பூர் மாவட்ட தலை வர் இரா.ஆறுமுகம், செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, மாநகர செயலா ளர் பா.மா.கருணாகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை முருகன் உள்ளிட்ட கழகத் தோழர் கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment