தொழிலாளர்களுக்கு அரசின் சலுகைகளை பெற்றுத் தரமுழுவீச்சில் செயல்படுவோம்: கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 10, 2021

தொழிலாளர்களுக்கு அரசின் சலுகைகளை பெற்றுத் தரமுழுவீச்சில் செயல்படுவோம்: கலந்துரையாடலில் தீர்மானம்

தாராபுரம், மார்ச் 10- தாராபுரம் கழக மாவட்டம் சார்பாக திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிடர் தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம் 21.2.2021 மாலை 7 மணிய ளவில் தாராபுரம் அண்ணா சிலை அருகிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தாராபுரம் கழக மாவட்ட செயலாளர் .சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.இராதா, மாவட்ட தலைவர் .கிருஷ்ணன், துணைத் தலைவர் முத்து முருகேசன், தாராபுரம் ஒன்றிய தலைவர் நாத்திக சிதம்பரம், நகர தலைவர் மு.சங்கர், செயலாளர் .மணி, பக பொறுப் பாளர் உடுமலை முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக மாநில பொறுப்பாளர்கள் உரை

நிகழ்வில் திராவிடர் கழக அமைப் பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் பேசுகையில்: தந்தை பெரியாருக்கு பிறகு நமது இயக்கம் செம்மாந்து உயர்ந்து நிற்கிறது. தந்தை பெரியார் மறைந்து 48 ஆண்டுகள் ஆகியும், ஆதிக்கவாதிகளை மிரட்டி வரு கிறார். கழக மாணவர் கழக செயல் வீரர்கள் தமிழர் தலைவரின் உரை களை தவறாது கேட்கவேண்டும், நாம் அணியும் கருப்பு சட்டை அழ கிற்காக அல்ல. வருணாசிரமப்படி நம்மீது சுமத்தப்பட்டுள்ள இழிவை ஒழிக்கவே. இயக்க பணிகளை மேற் கொள்ள மாணவர்களை தயார் படுத்தி கட்டமைப்பதே இக்கூட்டத் தின் நோக்கமாகும் என்றார்.

திராவிடர் கழக அமைப்புச் செய லாளர் ஈரோடு .சண்முகம் தமது உரையில், தமிழர் தலைவரின் சொல் படி நடந்தால் அனைவருக்கும் வாழ்வு. தமிழர் தலைவரின் சொல்லை பின்பற்றாவிடில் அனைவருக்கும் தாழ்வே. மாணவர் கழகத் தோழர்கள் கழக ஏடான "விடுதலை" இதழை நாள்தோறும் படித்தறிய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

திராவிடர் கழக தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகர் தெரிவித்ததாவது: திராவிடர் தொழிலா ளர் அணியை கட்டமைப்பதில் கழக தோழர்கள் முழுக் கவனம் செலுத்த வேண்டும், அமைப்பு சாராத தொழி லாளர்களை அதாவது அரசு சலுகை கள் கிடைக்காமல் பணி செய்கின்ற உடலுழைப்பு தொழிலாளர்கள் அனைவரையும் பெருவாரியாக உறுப்பினராக சேர்க்கவேண்டும், உறுப்பினர் ஒவ்வொருவரிடமும் ஆண்டு சந்தா ரூ.120 பெறவேண்டும். உறுப்பினர்களுக்கு 51 வயது முதல் 60 வயது வரை மாத ஊதியம், உடலு ழைப்பு தொழிலாளர்களின் பிள்ளை களுக்கு கல்வி மற்றும் மருத்துவ வசதி கள்,மகளிர்களுக்கு பிரசவ காலத்தின் போது சலுகைகள் இவ்வாறாக பல் வேறு வசதிகளை நமது தொழிலாளர் அணி வாயிலாக அரசிடமிருந்து பெற முடியும்.என்று கூறினார்.

திராவிட மாணவர் கழக அமைப் பாளர் இரா.செந்தூரபாண்டி பேசிய தாவது; ஜாதி ஒழிப்பு தான் நமது இயக்கத்தின் முதல் கொள்கை. அதைத் தொடர்ந்து தந்தை பெரியாரின் அடியொற்றி கழக மாணவரணியினர் பயணப்படவேண்டும்.அறிவு சார்ந்த செய்திகளை பொதுமக்களி டம் ஊக்குவிக்கும் மகத்தான பணி தான் நம்முடைய பணி. இயக்கத்தின் சார்பில் கூட்டங்களை நடத்தி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர் கழகத்தினர் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். திராவிட மாண வர் கழகம் என்பது 80 ஆண்டுகால செயல்பாட்டையும், வீரிய வரலாற் றையும் உள்ளடக்கியதாகும். தற் போது மாணவர் கழகம் சார்பில் "மின்னிதழ்" துவங்கப்பட்டுள்ளது. மாணவர் கழகத்தினர் நமது இயக்க வெளியீடுகளை தவறாது படிக்க வேண்டும். பரப்பவேண்டும்.  குறிப் பாக மாவட்ட பொறுப்பாளர்களோடு இணைந்து,பெரியார் பெருந்தொண் டர்களின் வழிகாட்டுதலோடு செயல் படவேண்டும்.என்று பேசினார்.

நிகழ்வில் அறிவிக்கப்பட்ட மாண வர் கழகப் பொறுப்பாளர்கள், தொழிலாளரணி பொறுப்பாளர் களுக்கு கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் வாழ்த்துரை வழங்கி பேசியதாவது; தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை அறவே விட்டு கழகத் தோழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு களப்பணிகளை மேற் கொள்ளவேண்டும். பதவி, பாராட்டு ஆகியவற்றை துச்சமென கருதி ஏச்சுக்கள், பேச்சுக்கள் ஆகியவற்றை கொள்கை ரீதியாக எதிர்கொண்டு மக்களின் பின்னே நாம் செல்லாமல், கொள்கை அடிப்படையில் மக்களை ஈர்த்து, ஒருங்கிணைத்து மக்களுக்கு ஆக வேண்டியதை ஆக்கி கொள்கின்ற உயர்ந்த இயக்கம் நம்முடைய இயக் கம். நாம் பதவிகளை பெறுவதில்லை, பதவிகளை உருவாக்கி தந்துள்ளோம். ஒரு வலிமைமிக்க நிலையில் நமது தொழிலாளர் அணியை நாம் உரு வாக்கவேண்டும். மத அடிப்படை வாதங்களை ஒழிப்பது திராவிடர் கழகத்தால் மட்டுமே முடியும். நமது இயக்கத்தில் ஒழுக்கம், நாணயம் என்பதே முக்கியம். நம்மை நாமே வலி மைப்படுத்திக் கொள்ளவேண்டும். மாணவர் கழகத் தோழர்கள் அஞ்சா நெஞ்சோடு கழகப் பணியாற்றிட வேண்டும் என்று உரையாற்றினார்.

பொறுப்பாளர்கள் நியமனம்

திராவிடர் தொழிலாளர் அணி தாராபுரம் கழக மாவட்ட தலைவர் .நடராஜ், செயலாளர் பொன். ஆறுமுகம், அமைப்பாளர் பழ.துரை யரசன், திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர் பா.கோவேந்தன், செயலாளர் மி.கொடியரசு, அமைப் பாளர் .வெற்றி மணி, தாராபுரம் மாநகர தலைவர் மு.இளவேனில், செயலாளர் .இளஞ்செழியன், அமைப் பாளர் பா.பூவேந்தன் ஆகியோரை புதிய பொறுப்பாளர்களாக தாரா புரம் கழக மாவட்ட தலைவர்.கிருஷ்ணன் அறிவித்தார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1) மத்திய அரசின் கல்வித்திட்டத் தின் மூலம் நடத்தப்படும் எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளு வரை ஒரு புரோகிதப் பார்ப்பனர் போல் காவியுடனும், பூணூல் குடுமி யுடனும் சித்தரிக்கப்பட்ட கொடுமை அரங்கேற்றப்பட்டுள்ளதை இக்கூட் டம் வன்மையாக கண்டிக்கிறது.இதனை ஒரு வாரத்திற்குள் மாற்றா விட்டால் அப்பாடத்தை கொளுத்து வோம் என்று அறிவித்துள்ள தமிழர் தலைவரின் அறிவிப்பை ஏற்று அறி விக்கப்படும் நாளில் கொளுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

2) தொழிலாளர்களின் நலனை முன்னெடுக்கும் வகையில் திராவிடர் தொழிலாளர் அணியை தாராபுரம் கழக மாவட்ட பகுதிகளில் கட்ட மைத்து பெருவாரியாக உறுப்பினர் களை சேர்ப்பதெனவும், தொழிலாளர் களுக்கு அரசின் சலுகைகளை பெற் றுத்தர முழுவீச்சில் செயல்படுவதென வும் முடிவு செய்யப்பட்டது.

பங்கேற்றோர்

மடத்துக்குளம் ஒன்றிய கழக செயலாளர் மா.தங்கவேல், குமரலிங் கம் நகர கழக அமைப்பாளர் கி.மாரி யப்பன், தாராபுரம் பகுத்தறிவாளர் கழக நகரத் தலைவர் சு.திராவிடன், அமைப்பாளர் மதி பெரியார்நேசன், கழக மகளிரணியைச் சார்ந்த ரீனா, மாணவர் கழகத் தோழர்கள் கல்கி, முகுந்தன், வெற்றிகொண்டான், தாரா புரம் முனைவர் சிவசங்கர் (திமுக), பெரியார் பிஞ்சுகள்: பெரியார்நேசன், யாழ் மதிவதனி ஆகியோர் பங்கேற் றனர்.

No comments:

Post a Comment