ஈழத் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்அய்.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா வாக்களிக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 7, 2021

ஈழத் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்அய்.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா வாக்களிக்க வேண்டும்

பிரதமர் மோடிக்கு தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 7 திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் நேற்று (6.3.2021) வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றத்திற்கு பொறுப்பான இலங்கை அரசை பன்னாட்டு குற்ற வியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் தீர் மானத்தை அய்.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற வலி யுறுத்தி, லண்டனில் சகோதரி அம் பிகை காலவரையற்ற பட்டினிப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.

அவரது உணர்விற்கும், இலங்கை யில் வாழும் ஈழத்தமிழர்களின் உணர்விற்கும், தொப்புள் கொடி உறவாம் ஈழத்தமிழர்களின் மீது  தமிழ் நாட்டில் வாழும் 7 கோடி தமிழர்க ளுக்கு இருக்கும் உணர்விற்கும் மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இதே கோரிக்கையை இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமுகமாக, ஏற்கெனவே இந்தியா உள்ளிட்ட பல் வேறு நாடுகளுக்கு முன்வைத்திருக் கின்றன. திமுக சார்பில் அந்த கோரிக் கைகளை ஆதரித்து பிரதமருக்கு கடந்த ஜனவரி மாதத்திலேயே கடிதம் எழுதியுள்ளேன். அதில், திமுக நாடா ளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையொப்பமிட்டிருந்ததை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அந்த கடிதத்தில், கடந்த காலத்தில் அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை இந்த தரு ணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். ஆகவே, அய்க்கிய நாடுகள் சபையில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் 46ஆவது கூட்டத்தில் மற்ற உறுப்பி னர்களுடன் இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட்டு - இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகளின் கோரிக்கை நிறை வேறுவதை பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்திட கேட்டுக் கொள்கி றேன் எனக் கோரிக்கை விடுத்திருந் தேன்.

ஆகவே, ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை மீதான வாக்கெடுப்பு அய்.நா மனித உரிமை மன்றத்தில் நடைபெற இருக் கின்ற இந்த தருணத்தில், ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளின் கோரிக்கை களை ஆதரித்தும், இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் விருப் பத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்தியா வாக்களிக்க வேண்டும். அதற்கு ஆதரவாக உறுப்பு நாடுகளை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட வேண் டும் எனவும் பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கிறேன்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல் வதை அய்.நா மனித உரிமை மன்றக் கூட்டத்தில் உறுதி செய்திட தேவை யான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி தனது நேரடி பார் வையில் எடுத்திட வேண்டும் எனவும், இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப் பாட்டினை அய்.நா. மனித உரிமை மன் றத்தில் இந்தியா எடுத்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment