இடையீட்டு மனுக்களை முடித்து வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு சட்டரீதியாக வழங்கப்பட்டுவருகிறது.தற்போது நடைமுறை யில் உள்ள இந்த 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை, மகாராட்டிர மாநில இடஒதுக்கீடு தொடர்பாக அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ள வழக்கோடு சேர்த்து விசாரிக்கக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த காயத்ரி, தினேஷ், பார்த்தசாரதி உள்ளிட்டபலர் உச்சநீதிமன்றத் தில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதி பதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் நேற்று (3.3.2021) நடந்தது.
மனுதாரர்கள்தரப்பில்மூத்தவழக்குரை ஞர்கள் மனீந்தர் சிங், மீனாட்சி அரோரா, கபில்சிபல் ஆகியோர் ஆஜராகி வாதிட் டனர். ‘‘இடஒதுக்கீடு என்பது 50 சதவீதத் துக்கு அதிகமாக இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள் ளது. அந்த நடைமுறையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. ஆனால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது. தற்போது அதிலும், வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க தற்காலிக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனியாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ள நிலையில் வன் னியர் சமூகத்துக்கான உள்ஒதுக்கீடு என்பது ஏற்புடையதல்ல. ஏற்கெனவே உச்சநீதி மன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ள மகாராட்டிர மாநிலத்தின் மராத்தா இடஒதுக்கீடு வழக்குடன் இந்த வழக்கின் சாராம்சமும் ஒருமித்துப் போகிறது. அதனால், இந்த வழக்கையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி, மராத்தா வழக்குடன் சேர்த்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டனர்.
இதற்கு, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோஹத்கி, சேகர் நாப்தே ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘‘தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு வழக்கையும், மராத்தா இடஒதுக்கீடு வழக்கையும் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. ஒப்பிட வும் கூடாது. ஏனெனில், தமிழகத்தில் பின்பற் றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அரச மைப்பு சாசனத்தின் பிரிவு 9-இன் கீழ் சட்ட ரீதியிலான பாதுகாப்பு உள்ளது. எனவே, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கூடாது. மேலும், தமிழகத்தில் பேர வைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த வழக்கை தற்போது விசாரிக்க வேண்டிய அவசியமில்லை’’ என அவர்கள் வாதிட்டனர்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக் கீட்டுக்கு எதிரான இந்த வழக்குகளை அர சியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய தேவையில்லை. அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வரும் மராத்தா இடஒதுக்கீடு வழக்கு முடிந்த பின்னரே தமிழக இடஒதுக்கீடு தொடர்பானவழக்குவிசாரிக்கப்படும்’’என்று கூறி, 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட இடையீட்டு மனுக்கள் அனைத் தையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment