50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு பின்பற்றப்படலாமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 9, 2021

50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு பின்பற்றப்படலாமா?

 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி. மார்ச் 9-  50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு பின்பற்றப்படலாமா என்பது குறித்து பதிலளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

மகாராட்டிராவில் ஏற்கெனவே 52 விழுக்காடு இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில் மராத்தா சமூகத்தின ருக்கு 16 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய பாஜக அரசு மசோதா கொண்டுவந்தது. அதை உச்சநீதிமன்றம் அனுமதித்த 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந் நிலையில் வழக்கு நேற்று (8.3.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசுகளின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள விரும்புவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், 50 விழுக் காடுக்கு மேல் இட ஒதுக்கீடு பின்பற்றலாமா  என்பது குறித்து அனைத்து மாநில அரசுகளும் வரும் 15ஆம் தேதிக்குள் பதி லளிக்க உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் அரசியல் சாசன அமர்வின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment