தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஒதுக்கீடு
சென்னை,மார்ச்5- நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினும்
-விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் நேற்று (4-_3-_2021) தொகுதி உடன் பாடுகள் குறித்து கலந்து பேசியதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழகத்தில் 6 (ஆறு) சட்டமன்றத் தொகுதிகளை பங்கிட்டுக் கொள் வதென முடிவு செய்யப்பட்டது.
இந்த பேச்சு வார்த்தையின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி
பொதுச் செயலாளர்கள் சிந்தனைச் செல்வன், டி.இரவிக்குமார், எம்.பி., பொருளாளர் முகமது யூசுப் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
இந்திய யூனியன் முசுலீம் லீக்
ஏற்கெனவே, 1-_3-_2021 அன்று தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினும் - இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகி தீனும் தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, தமிழகத்தில்
3 (மூன்று) சட்டமன்றத் தொகுதிகளை பங்கிட்டுக் கொள் வதென முடிவு செய்யப்பட்டது.
இந்த பேச்சு வார்த்தையின்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.எ.எம்.முஹம்மது அபூபக்கர், எம்.எல்.ஏ, பொருளாளர் எம்.எஸ்.எ.சாஜஹான், மாநில முதன் மைத் துணைத் தலைவர் எம்.அப்துல்ரகுமான்,
மாநில துணைத் தலைவர் கே.நவாஸ்கனி, எம்.பி., மாநிலச் செயலாளர் எச்.அப்துல் பாசித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மனிதநேய மக்கள் கட்சி
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹி ருல்லாவும்
1-_3_-2021 அன்று தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மனித நேய மக்கள் கட்சி, தமிழகத்தில் 2 (இரண்டு) சட்டமன்றத் தொகுதிகளை பங்கிட்டுக் கொள் வதென முடிவு செய்யப்பட்டது.
இந்த பேச்சு வார்த்தையின்போது மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது, உயர்நிலைக்குழு உறுப்பினர் என்.ஷபியுல்லாகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment