பாடுபட்டு உழைக்கக்கூடிய நம்மைக் கீழ் ஜாதியென்று பார்ப்பனர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். நாம் திருட வில்லை; கொள்ளையடிக்கவில்லை; யாரையும் மோசம் செய்யவில்லை. இப்படிப்பட்ட மக்களைச் சட்டப்படி - சாஸ்திரப்படி சூத்திரர்கள், நாலாம் ஜாதி, அய்ந்தாம் ஜாதி என்று எழுதி வைத்திருக்கின்றார்கள். இது பற்றி நம் மக்கள் மானமோ, ஈனமோ இல்லாதவர்கள் போல் கவலையற்றிருக்கிறார்கள். போதாக்குறைக்கு நம் இனத் துரோகிகளும் பார்ப்பனருக்குத் துணை போகிறார்கள். இழிவை ஒழிக்க நம் மக்கள் முன் வர வேண்டாமா?
- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1
‘மணியோசை’
No comments:
Post a Comment