தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது:
சிபிஅய் குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல் படாமல், மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டினார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் செய்தியாளர்களி டம் அவர் கூறியதாவது:
அதிமுக தேர்தல் வாக்குறுதியில் 6 சிலிண்டர் இலவசம் என அறிவிப்பது ஏற்றுக் கொள்வதாக இல்லை. 6 சிலிண்டர் இலவசமாக கொடுத்து விட்டு மற்றொரு 6 சிலிண்டரில் பணத்தை ஏற்றிவிடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். இலவசம் என்பது ஏமாற்று வேலை. இவர்கள் ஆட்சிக்கு வர முடியாது, ஆகையால்தான் இந்த அறிவிப்பு.
மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் விலை வாசியை ஏற்றிக்கொண்டே வருகிறது. தேர்தல் ஆணையம் இப்போது சுதந்திர மாகச் செயல்படவில்லை. மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருகிறது. தேர்தலை திடீரென அறிவித்து எதிர்க் கட்சிகளைச் செயல்பட விடாமல் நெருக் கடிக்கு ஆளாக்கி உள்ளது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை கசிந்து விட்டது என முதல்வர் பழனிசாமி கூறுகிறார். இதைக் கூடப் பாதுகாக்க முடியா தவர்கள் இவர்கள். அதிமுக மிகவும் பலவீன மான கட்சி என்று கூறினார்.
இதற்கிடையே நாகை மாவட்டம் திருமருகல் சந்தைபேட்டை திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் முத்தரசன் பேசியதாவது: நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக நினைத்து, வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெற வேண்டும். எதிரியை ஒரு இடத்தில்கூட வெற்றிபெற விடக்கூடாது என்பதில் வைராக் கியமாக இருக்க வேண்டும்.
ஆடு, மாடுகளை விலை கொடுத்து வாங்குவதுபோல, பாஜக அரசு நினைத்ததை சாதிக்க,மக்களால் தேர்ந்தெடுத்த எம்எல்ஏக் களை விலை கொடுத்து வாங்கிவருகிறது. பிரதமர் மோடிக்கு எதிராக நான் பிரச்சாரம் செய்வதால், என்னை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தாலும், அங்கும் நான் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என்றார்.
திமுக கூட்டணி தொகுதி உடன்பாடு
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு
3 தொகுதிகள் ஒதுக்கீடு
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினும் - கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரனும் நேற்று (9.3.2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழகத்தில்
3 (மூன்று) சட்டமன்றத் தொகுதி களை பங்கிட்டுக் கொள்வதெனவும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தை யின் போது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பேரவைத் தலைவர் ஆர்.தேவராஜன் உடனிருந்தார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன்
தேர்தல் சிறப்பு செலவின
பார்வையாளர் ஆலோசனை
தமிழகத்தில் நடைபெறும் தேர்தலை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ள, சிறப்பு செலவின பார்வை யாளர் நேற்று (9.3.2021) தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத் தினார். அப்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசு கொடுப்பதை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் ஒவ்வொரு முறை சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும்போது அனைத்துக்கட்சிகளும் குற்றம் சாட்டுவது, வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியினர் பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்பதுதான். இப்படி ஒவ்வொரு முறை கூறினாலும், பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டியும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும் சிறப்பு செலவின பார்வையாளர்கள் இரண்டு பேரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதன்படி ஓய்வுபெற்ற அய்.ஆர்எஸ் அதிகாரிகள் மதுமகாஜன், பாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு பேர் தமிழக தேர்தல் சிறப்பு செலவின பார்வையாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இதில் பெண் அதிகாரியான மதுமகாஜன் திங்களன்று இரவு டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.இதையடுத்து, நேற்று (9.3.2021) மதியம் 12 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு செலவின பார்வையாளர் மதுமகாஜன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இணை தேர்தல் அதிகாரிகள் ஆனந்த், அஜய் யாதவ் மற்றும் காவல் உயர் அதிகாரிகள், வருமான வரி, கலால் துறை, அமலாக்க துறை, வங்கி உயர் அதிகாரிகள், தேர்தல் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், பணப் பட்டுவாடா செய்வது மற்றும் வாக்களிக்க பரிசு பொருட் களை வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப் பாக பறக்கும் படை மற்றும் வருமான வரி துறை சோதனைகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் செலவினங் களை கண்காணிக்கும் அதி காரிகள் கொடுக்கும் தினசரி அறிக்கையின் அடிப்படையில் மேல் நட வடிக்கை எடுப்பது உள்ளிட்ட தேர்தல் சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment