ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் 90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 31, 2021

ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் 90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாசிங்டன், மார்ச் 31- ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் அமெரிக்கா வில் 90 சதவீதம் பேர் தடுப் பூசிக்கு தகுதி பெறுவார்கள் என்று அதிபர் ஜோ பைடன்  தெரிவித்தார்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல் கலைக்கழகத்தின் புள்ளிவிவ ரங்களின் படி  மார்ச் 29 ஆம் தேதி வரை அமெரிக்கா ஒரு நாளைக்கு 63,000 புதிய கரோனா பாதிப்புகளை  சரா சரியாகக் கொண்டுள்ளது. இதற்கிடையில், கடந்த வாரத் தில் நாடு முழுவதும் சராசரி யாக 27 லட்சம் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மய்யம் தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு பிற்பகுதி யில் நாட்டின் தடுப்பூசி இயக் கம் தொடங்கியதிலிருந்து திங்களன்று 14.58 கோடிக்கும்  அதிகமான தடுப்பூசி போடப் பட்டு உள்ளது. அதே நேரத் தில் 73 சதவீத முதியவர்கள் முதல் டோஸைப் பெற்றுள்ள னர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் அமெரிக்ககாவில்  90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி பெறு வார்கள் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் மூன்று வாரங்களுக்குள் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட இருப்பதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

ஊசி போடும் முகாம்கள் அவர்கள் வசிக்கும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அமைக் கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 17 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் தற்போது 40 ஆயி ரம் முகாம்களாக அதிகரிக்கப் பட்டுள்ளன என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தாம் பதவியேற்ற 100 நாட் களில் 2 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்திருப்பதாக முன்னர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார் என்பது குறிப் பிடதக்கது.

No comments:

Post a Comment