பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டைஅ.தி.மு.க. அரசு ஏற்காத நிலையில் -அண்ணா பல்கலைக் கழகத்தில் அமல்படுத்தியது எப்படி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 9, 2021

பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டைஅ.தி.மு.க. அரசு ஏற்காத நிலையில் -அண்ணா பல்கலைக் கழகத்தில் அமல்படுத்தியது எப்படி?

 .தி.மு.. அரசு துணை போகிறது என்றால், இதன் விளைவை தேர்தலில் அனுபவிக்க நேரிடும்சமூகநீதி சக்திகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும், சட்ட அறிஞர்களும் எதிர்த்துக்  குரல் கொடுக்க முன்வரட்டும்!

பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை ஆளும் .தி.மு.. அரசு ஏற்காத நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தில் அமல்படுத்தியது எப்படி? இதற்கு .தி.மு.. அரசு துணை போகிறது என்றால், இதன் விளைவை தேர்தலில் அனுபவிக்க நேரிடும்; சமூக நீதி சக்திகளும், முற்போக்குச் சிந்தனையாளர் களும், சட்ட அறிஞர்களும் எதிர்த்துக் குரல் கொடுக்க முன்வரட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அண்ணா பல்கலைக் கழகம் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் ஒரு பல் கலைக் கழகம். தமிழ்நாடு அரசின் நிதிதான் இதற்குப் பெரிதும் செலவிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அத்தனைப் பொறியியல் கல்லூரிகளும் இப்பல்கலைக் கழகத்தின் இணைப் பில்(Affiliated Colleges) இருக்கின்றன. இது ஒருபுறம் இருந்தாலும், இப்பல்கலைக் கழகத் திற்கென தனித் தனித் துறைகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அதில் ஒரு துறை பயோ டெக்னாலஜி(Bio-technology) உயிரி தொழில்நுட்பத் துறை. இதில் மேற்பட்டப் படிப்பையே இவ்வாண்டு நிறுத்திவிட சூழ்ச்சிகள் நடந்தன. இதனை எதிர்த்து அறப்போர் களும், கண்டனங்களும் வெடித்தன. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் போடப்பட்டு, அத்தீர்ப்பின் விளைவாக 69 சதவிகித இட ஒதுக்கீடு இவ்வாண்டுக்கு வாய்ப்பில்லை என்றனர்.

ஏன் 49.5  சதவிகித இட ஒதுக்கீட்டையாவது மட்டும் தந்து தொடங்குங்கள் இவ்வாண்டே என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்துக் கூறியது.

மிகத் தந்திரமான ஒரு சூழ்ச்சி -உள்ளே நுழைக்கப்பட்டு விட்டது!

இந்த நேரத்தில், மிகத் தந்திரமான ஒரு சூழ்ச்சி - உள்ளே நுழைக்கப்பட்டு விட்டது அங்குள்ளசூர'த்தினால்!

10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் நலிந்த முன்னேறிய ஜாதிகள் என்பதே; மத்திய அரசு ஏற்பாட்டைப் (அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான அடிக்கட்டுமான தகர்ப்பு  அரசமைப்புச் சட்டத் திருத்தம் (103 ஆவது))பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதிர்ச்சிக்குரிய ஒன்று!

தமிழ்நாடு அந்த 10 சதவிகித ஏற்பாட்டை இன்னமும் அதிகாரப்பூர்வமாக ஏற்காத நிலையில் - செயல்படுத்த எந்த ஆணையும் போடாத நிலையில், தமிழ்நாட்டில் உள்ள தொழில்நுட்பப் பல்கலைக் கழகமான அண்ணா பல்கலைக் கழகத் தின் இந்த எம்.டெக் தேர்வில் எப்படி 10 சதவிகித முன்னேறிய ஜாதி இட ஒதுக்கீடுபடி மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது அதிர்ச்சிக் குரிய ஒன்றாகும்!

அண்ணா பல்கலைக் கழகத்திற்குத் தனி அந்தஸ்து தரும் உயர் ஆராய்ச்சி நிறுவனமாக ஆக்குகிறோம் என்று தமிழக அரசு நாக்கில் தேன் தடவி, இதனை மத்திய பா... அரசு தனது வசம் எடுத்துக்கொள்ள முயன்றபோது, அப்படி நடந் தால், இட ஒதுக்கீடு அறவே ஒழிக்கப்படும் ஆபத்து ஏற்படும் என்று தமிழ்நாட்டில் கிளம்பிய எதிர்ப்புப் புயலைக் கண்டு அஞ்சியேதான் தமிழ்நாட்டின் .தி.மு.. அரசு அதனை உயர் ஆராய்ச்சி நிறுவனமாக்க ஒப்புக்கொள்ளவில்லை.

முக்கிய கேள்வியல்லவா?

அந்த நிலையில், தமிழ்நாடு அரசே இன்னமும் 10 சதவிகித உயர்ஜாதிக்காரர்களுக்கான இட ஒதுக் கீட்டை ஏற்காத நிலையில், அண்ணா பல்கலைக் கழகம் மட்டும் எப்படி இதனை செயல்படுத்த முன்வந்துள்ளது என்பது முக்கிய கேள்வியல்லவா?

கண்டும் காணாததுபோல (இரட்டை வேடம் போடுவதுபோல்) இதற்குத் தமிழக அரசின் உயர்கல்வித் துறை அனுமதி அளித்திருக்க வேண்டும்; இல்லையேல், தானடித்த மூப்பாகவே - தாங்களே இந்த 10 சதவிகித உயர்ஜாதி இட ஒதுக்கீட்டை செயல்படுத்தும் முடிவை எடுத்திருக்கவேண்டும்.

இந்த இரண்டில் எது உண்மை?

இந்த இரண்டில் எது உண் மையானாலும் சட்டப்படி தவ றான நிலைப்பாடு அல்லவா?

தமிழக அரசு கொள்கை முடிவாக எடுக்க வேண்டிய முக்கிய இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை யல்லவா!  அரசியல் சட்ட ரீதியான பிரச்சினையான கொள்கை முடிவை எடுக்காத முந்திரிக் கொட்டை யாக அண்ணா பல்கலைக் கழகம் இதற்கு (10 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு) கதவு திறந்தால், பிறகு எல்லா பல்கலைக் கழகங்களிலும் இது  நுழைந்து விடும் ஆபத்து தானே வந்துவிடும்.

முன்பு 69 சதவிகிதத்திற்கு இவ்வாண்டு முடியாது என்று கூறி, 49.5 சதவிகிதம் முடியும் என்றால், கூடுதல் 10 சதவிகித இடங்களுக்கு மட்டும் எப்படி ஒப்புக்கொள்ள முடிகிறது?

இது திட்டமிட்ட ஆரியத்தின் சித்து விளை யாட்டு! தந்திர வித்தைகள் - இதற்கு தனது மவுனம் மூலமோ அல்லது காணாததுபோல கண்ணை மூடித் தலை யாட்டும் நிலையையோ .தி.மு.. அரசு செய்திருந் தால்  நியாயந்தானா?

இதற்கு அத்துணை முற்போக்குச் சிந்தனை யாளர்களும், சமூகநீதிக்கான போராளி அமைப் புகளும், கட்சிகளும், தலைவர்களும், சட்ட அறிஞர்களும் ஓங்கிக் குரல் எழுப்பவேண்டாமா?

இதன் விளைவை ஆளும்கட்சிகூட்டணியினர் அனுபவிக்க வேண்டியிருக்கும்!

தேர்தல்தான் விடை என்றால், நிச்சயம் ஆளும் கட்சி, கூட்டணி (பா... - .தி.மு..) இதன் விளைவை அனுபவிக்க ஆயத்தமாக வேண்டியதே ஒரே தீர்வு போலும்!

 கி.வீரமணி

 தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

9.3.2021                             

No comments:

Post a Comment