குடுமிப் பார்ப்பானா திருவள்ளுவர்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 27, 2021

குடுமிப் பார்ப்பானா திருவள்ளுவர்?

சி.பி.எஸ்.. 8ஆம் வகுப்பு இந்தி பாடத்தில் திருவள்ளுவர் படம் ஒன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. காவி உடை, நெற்றியில் திருநீறு, தலையில் குடுமி. இவர்தான் திருவள்ளுவர் என்று காட்டப்பட்டுள்ளது.

ஏதோ தெரியாமல் செய்து விட்டதாக யாரும் கருதிட வேண்டாம். பலித்தவரை ஆதாயம் என்பது பார்ப்பனர் களுக்கே உரித்தான புத்தி.  போட்டு வைப்போம் - யாரும் கண்டு கொள்ளவில்லையென்றால், அதையே நிலை நிறுத்தி விடலாம் - விழித்துக் கொண்டுள்ளனரா தமிழர்கள் என்று ஒரு தூண்டிலை எறிந்து பார்ப்போம் - விழித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொண்டால்ஏதோ தவறு நேர்ந்து விட்டது!’ என்று ஒரு வரியில் சொல்லிக் கரை ஏறிவிடலாம் என்பது அவர்களின் பரம்பரை அணுகுமுறை

உயர்நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் கொச்சையாக பேசி விட்டு, பிரச்சினை பெரிதாகிறது என்றவுடன்மன் னிப்புஎன்ற ஒரு சொல் மூலம் சிறைக்குச் செல்லாமல் தப்பித்து விடலாம் என்கிற சின்னப் புத்தி அவாளுக்கு.

ஏதோ ஒரு பாடத் திட்டத்தில்தான் திருவள்ளுவர் இப்படி சித்தரிக்கப்பட்டுள்ளார் என்று நினைத்து ஏமாந்து விட வேண்டாம்.

பரிமேலழகர் முதல் காஞ்சி சங்கராச்சாரியார் பார்ப்பனர் வரை திருவள்ளுவரைத் தங்கள் பக்கம் இழுப்பதில் திட்டமிட்டு கயிறு திரிப்பு வேலையில் இறங்கி வந்திருக் கின்றனர்.

திருக்குறளில் அறமாவது - மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கிய ஒழிதலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்என்கிறார் திருக்குறளுக்கு உரை எழுதிய பார்ப்பனரான பரிமேலழகர்.

திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறத்துப்பால் என்பது  மனு முதலிய நூல்களில் கூறப்பட்டுள்ளனவற்றை ஏற்றும் விலக்கப்பட்டவை தவிர்த்தலும் ஆகும் என்று கூறுவதி லிருந்தே பார்ப்பனர்களின் பார்வை படம் எடுத்தாடும் பாம்பை ஒத்தது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

நல்ல குணம் வளர அறத்துப்பாலில் வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறாரோ, அதைச் சொல்லிக் கொடுத்தால் போதும்,  வேதத்தின் சாரம் அதில் உள்ளது.  திருக்குறளில் பொருட்பால், காமத்துப்பால் முதலியவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காமத்துப்பாலை இக்காலத்துச் சினிமாக்களே சொல்லிக் கொடுத்து விடு கின்றன!” என்று கூறியவர் சாட்சாத் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிதான் (ஆதாரம்: ‘தினமணி’ - 6.3.1982).

இந்த சங்கராச்சாரியார் மட்டுமல்ல - இவரின் குரு நாதரான மகாபெரியவாள் என்று மெச்சப்படும் காஞ்சி சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ் வதியின் கருத்து என்ன?

ஆண்டாள் பாடியதாகக் கூறப்படும் திருப்பாவையில் இரண்டாவது பாடல்: “நாட்காலை நீராடிஎன்று தொடங்கும்  - அதில்செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்று ஓதோம்என்பது ஒருவரி: இந்த வரிக்கு இந்தப் பெரியவா(ல்)ள் என்ன பொருள் சொன்னார் தெரியுமா?

தீய திருக்குறளைச் சென்று ஓத மாட்டோம்என்று சீர் பிரித்து விளக்கம் சொன்னாரே!

தீக்குறளைச் சென்றோதோம் என்றால் தீமை விளை விக்கும் கோள் சொற்களைச் சொல்ல மட்டோம் என்பது பொருளாகும்.

குறளை என்பதற்கு என்னதான் பொருள்? ‘அய்காரத் தைக் கடைசியாகக் கொண்ட இந்தச் சொல்லுக்கான பொருள் கோள் சொல்லுதல் என்பதாகும். (மதுரைத் தமிழ்ப் பேரகராதி பார்க்க).

அனேகமாக பார்ப்பனர்களின் மனப்பான்மை - திருக்குறள் எதிர்ப்பு - கொச்சைப்படுத்தும் போக்கு இவர் களின் இனவாத சித்தாந்த நோக்காகும்.

பெங்களூரில் நீண்ட காலமாக மூடப்பட்டுக் கிடந்த திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட போதுசோ ராமசாமி என்ன எழுதினார்?

கேள்வி: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப் படுவதன் மூலம் கன்னடர் - தமிழர் இடையே நல்லுறவு, நல்லிணக்கம் ஏற்படும் என்று கருநாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளாரே!

பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான், யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தாலே போதும். (‘துக்ளக்‘ 9.8.2009 பக் 9).

துக்ளக்பார்ப்பான் இப்படி துடுக்குத்தனமாக எழுது கிறார் என்றால்தினமலர்பார்ப்பான் என்ன எழுதுகிறார்?

தமிழகப் பொதுப் பணித் துறைச் செயலாளர் ராம சுந்தரம்: தமிழகத்திற்குக் கருநாடகா ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும்; மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். கருநாடகா அரசு குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடாததால் இந்தஆண்டு தாமதமாக கடந்த 7ஆம் தேதிதான் திறந்து விட்டோம்.

டவுட் தனபாலு: அதனால என்னங்க.. பெங்களூருல திருவள்ளுவர் சிலை திறந்து விட்டோமா இல்லையா? அதுக்கப்புறம் டெல்டாப் பகுதிகளில் முப்போகம் விளை யாதா என்ன?

(‘தினமலர்’ 18.8.2009)

எவ்வளவுக் கிண்டல் கேலி.

இவ்வளவையும் மீறி திருவள்ளுவரும் திருக்குறளும் உலகம் முழுவதும் பரவி விட்ட நிலையில்  அந்த இலாபம் தங்களுக்கு வந்துவிட வேண்டும் என்ற புத்தியில் திரு வள்ளுவரை குடுமி வைத்த பார்ப்பனராகச் சித்தரிக்கத் தொடங்கி விட்டனர். அதுவும் பள்ளிகளில் பாடத் திட்டத்தி லேயே குடுமி வைத்த பார்ப்பனராக திருவள்ளுவரை சித்தரித்து விட்டால், காலா காலத்திற்கும் அந்த எண்ண வோட்டம் இருக்கும் என்ற தொ(ல்)லைநோக்கு அவர் களிடையே குடிகொண்டு விட்டது என்றுதானே பொருள்.

சேரன் மாதேவி குருகுலம் புகழ் .வே.சு. அய்யர் என்ன எழுதுகிறார்.

.வே.சு. அய்யர் The Kural or the Maxims of Thiruvalluvar (1916)  என்று ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்து இருக்கிறார். அதன் முன்னுரையில்,

... Tradition declares that he was the child of a Brahman father named Bhaghavan and a Pariah mother Adi who had been brought up by another Brahman and given in marriage to Bhag havan. Six other children are named as the issue of this union, all of whom have debbled in poetry.

திருவள்ளுவரின் தந்தையார் பகவன் என்ற பார்ப்பனராவார். இவரது தாயார் ஆதி என்கிற பறைச்சி. ஆதியை இன்னொரு பார்ப்பனர் அழைத்துவந்து பகவ னுக்கு மணம் முடித்து வைத்தார். ஆதி - பகவன் கூட் டுறவால் திருவள்ளுவரன்றி ஆறு குழந்தைகள் பிறந்தனர். அக்குழந்தைகளுக்குப் பெயர்களும் சூட்டப்பட்டன என்று மரபுவழிச் செய்தியாக சொல்லப்படுவதோடன்றி இதனை கவிதையாகவும் எழுதி வைத்துள்ளனர்என்று எழுதியுள்ளார். ஒரு பாடலில் இக்கருத்தை கபிலனே சொல்லுவதாக அமைந்து இருக்கிறது. அதில்கூடஅந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்என்று கடைசி வரி முடிக்கப்பட் டுள்ளது. மேலும் அதே முன்னுரையில்,

“Thiruvalluvar does not treat of the fourth objective separately and Hindus say that he has submitted himself to the orthodox rule that none but a Brahman should be a teacher of spritual truth to mankind”.

அதாவது, “திருவள்ளுவர் நான்காவதான வீட்டுப் பேற்றைப் பற்றி தனியாக ஏதும் கூறவில்லை. மனித குலத்திற்கு ஆன்மீக உண்மைகளைப் பார்ப்பனரைத் தவிர வேறு எவரும் போதிக்கக் கூடாது என்ற பழங்கால வைதீக (வேத) விதிகளுக்கு திருவள்ளுவர் தம்மை உட்படுத்திக் கொண்டார் என்று இந்துக்கள் கூறுகிறார்கள்என்று எழுதினார்.”

(. திருநாவுக்கரசு அவர்களின்திருக்குறளும்  - திராவிடர் இயக்கமும்சங்கொலி 14.6.1996)

இதே போல இன்னொரு எடுத்துக்காட்டும் உண்டு.

திருவள்ளுவர், பார்ப்பனருக்குப் பிறந்ததால்தான் திருக்குறளை இயற்ற முடிந்ததென்று ஒரு பார்ப்பன வெறியர் பேசியதை .அயோத்திதாச பண்டிதர் கேள்வி கேட்டு மடக்கிய நிகழ்ச்சி   நூதன ஜாதிகள் உற்பவ பீடிகைஎன்ற சிறு நூலில் காணப்படுகிறது.

அறிஞர் திரு.. அயோத்திதாச பண்டிதர், இராயப் பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராயிருந்து தொண் டாற்றியவர். ‘தமிழன்என்ற வார இதழை 1907 இல் துவக்கி ஆரியப் பார்ப்பனப் புரட்டுகளை அம்பலப் படுத்தியவர்.

இவர்பார்ப்பன வேதாந்த விவரம்‘ ‘வேடப்பார்ப்பனர் வேதாந்த விபரம்‘ ‘நந்தன் சரித்திர விளக்கம்‘ ‘நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை’ “திருவள்ளுவ நாயனார், பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தாரென்னும் பொய்க் கதை விபரம்ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். அறிஞர் அயோத்திதாச பண்டிதர் தலைமை ஏற்று நடத்திய பவுத்த சங்கத்தைப்பற்றி திரு.வி.. “அவர்கள் சங்கம் எனது மதவெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்றுஎன்று போற்று கிறார்.

1892இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போதுவள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கல-சுரோனிதம் கலப்பறியாதுஎன்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர்  அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும்என்றார்.

அதற்கு சிவநாம சாஸ்திரி, “சரி, கேளும்என்றார்.

நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவுபடுத்தப் படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால்எம்..,’ ‘பி..,’ படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே. அவர் கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர்என்றார். அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.

பிறகு அறிஞர் திரு.. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்துபெருங்குற்றங்களைச் செய்து சிறைச் சாலை களில் அடைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக் குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர்என்று கேட்டார்.

சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திருதிரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் திரு. .அயோத்திதாச பண்டிதர், “ஏன் பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும்,” என்று சினந்து கேட்டுக் கொண்டி ருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில், திரு. பி.அரங்கைய நாயுடும், திரு. எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் திரு. .அயோத்தி தாச பண்டிதரை அமைதிப்படுத் தினார்கள்.

திரு. சிவநாம சாஸ்திரியை கூட்டத்தி லிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவி விட்டார்.

பா... ஆட்சியில் சி.பி.எஸ்.. எட்டாம் வகுப்பில் திருவள்ளுவர் காவி கட்டிய குடுமிப் பார்ப்பனராகச் சித்தரிக்கப்பட்டுள்ளதற்கு இவ்வளவும் பின்னணியில் உண்டு. எடுத்துக்காட்டுக்கு மட்டுமே இவை.

பார்ப்பனப் பண்ணையத்தைக் கொட்டிக் கவிழ்க்க இன்னும் இதுபோல் ஏராளம் உண்டே!

பார்ப்பான்பால் படியாதீர்; சொற்குக்கீழ்ப் படியாதீர்; உம்மை ஏய்க்கப்

பார்ப்பான்;தீ துறப்பார்ப்பான் கெடுத்துவிடப் பார்ப் பான் எப் போதும் பார்ப்பான்.

ஆர்ப்பான் நம் நன்மையிலே ஆர்வமிக உள்ளவன் போல்! நம்ப வேண்டாம்.

பார்ப்பானின் கையை எதிர் பார்ப்பானை யேபார்ப்பான் தின்னப் பார்ப்பான்.

தமிழின்பேர் சொல்லி மிகு தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட் டாலும்

தமிழழித்துத் தமிழர்தமைத் தலைதூக்கா தழித்துவிட நினைப்பான் பார்ப்பான்.

அமுதாகப் பேசிடுவான் அத்தனையும் நஞ்சென்க நம்ப வேண்டாம்

தமிழர்கடன் பார்ப்பானைத் தரைமட்டம் ஆக்குவதே என்று ணர்வீர்.

தமிழரின்சீர் தனைக்குறைத்துத் தனியொருசொல் சொன்னாலும் பார்ப்பான் தன்னை

உமிழ்ந்திடுக! மானத்தை ஒருசிறிதும் இழக்காதீர். தமிழைக் காக்க

இமையளவும் சோம்பின்றி எவனுக்கும் அஞ்சாது தொண்டு செய்வீர்.

சுமைஉங்கள் தலைமீதில் துயர்போக்கல் உங்கள்கடன். தூய்தின் வாழ்க!

- புரட்சிக்கவிஞரின்தமிழியக்கம்நூலிலிருந்து

No comments:

Post a Comment