மத்தியப் பிரதேச பா.ஜ.க. அரசு உத்தரவு
போபால், பிப்.4 மத்தியப் பிரதேச அரசு அலுவலகங்களில் இனி கோமியத்தால் தயாரிக்கப்பட்ட ‘பினாயில்' மட்டுமே பயன் படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. பாஜக ஆளும் மாநி லங்களில் பசுஞ்சாணம், கோமியம் போன் றவற்றுக்கு முன்னிடம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் பசுஞ்சாணம் மற்றும் கோமியம் மிகச் சிறந்த கிருமி நாசினி என பாஜகவினர் கூறி வருகின்றனர். இதையொட்டி கோமியம் மூலம் ‘பினாயில்' தயாரிக்கும் பணியை அரசு ஊக்குவித்து வருகிறது.
அதில் ஒரு பகுதியாக இவ்விதம் ‘கோமிய பினாயில்' தயாரிக்கும் நிறுவனங் களுக்கு மத்தியப் பிரதேச அரசின் விலங் குகள் நலத்துறை கோமியத்தை வழங்க உள்ளது. மேலும் இவ்வாறு கோமியத்தின் மூலம் தயாரிக்கப்படும் பினாயிலை மட்டுமே அரசு அலுவலகங்களில் பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த நட வடிக்கை மூலம் பால் வற்றிப்போன பசுக்களை கவனிக்காத நிலை மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் தனியார் தயாரிக்கும் ‘கோமிய பினாயிலை' அரசு வர்த்தக ரீதியாக முன்னிறுத்துவதாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் குனால் சவுத்ரி, “அரசின் இந்த முடிவு எவ் வித உள்கட்டமைப்பும் செய்யாமல் எடுக்கப்பட்டுள்ளது. பசுவின் பொருட்களை வர்த்தக ரீதியாக முன்னேற்ற நினைக்கும் அரசு அதை அரசு மூலம் உற்பத்தி செய்ய வேண்டும். தற்போது அரசின் இந்த அறிவிப்பால் பதாஞ்சலி நிறுவனம் மட்டுமே பயனடையும்” எனத் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் எதிர்ப்பு
2015 ஆம் ஆண்டு அப்போதைய ராஜஸ்தான் பாஜக அரசு பசு அமைச்சகம் மாநிலத்தின் அனைத்து மருத்துவமனை களிலும் ‘கோமிய பினாயில்' பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது, இதனை அம்மாநில மருத்துவர்கள் ஒன்றி ணைந்து எதிர்த்தனர். கோமியம் என்னும் பசுவின் மூத்திரம் கிருமி நாசினி என்று எந்தவகையிலும் மருத்துவ அறிவியல் ஒப்புக்கொள்ளவில்லை. உடலில் கழிவுகளில் ஒன்றான பாலூட்டிகளின் சிறுநீரில் இறந்த ரத்த அணுக்கள், அமோனியக் கரைசல், இரத்தக் கழிவுகள், உப்பு, நாளமில்லாச் சுரப்பிகளில் சுரக்கும் ஹார்மோன்களின் எச்சம் அத்தோடு சிறுநீர்ப்பைகளில் உள்ள பாக்டீரியங்கள் போன்றவை அதில் இருக்கும், இதில் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்துவிட்டோம் என்று கூறி இவற்றை விற்றாலும் அமோனியம் உள்ளிட்ட சில ஆபத்தான பொருட்கள் சிறுநீரோடு கலந்தே இருக்கும். இது தரையில் தெளிக்கப்படும் போது காற்றில் உள்ள நுண்ணுயிர்களை ஈர்த்து பல்கிப் பெருகச் செய்து அத்தோடு தொடர்புகொள்ளும் போது நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற் படுத்தும் என்று கூறினர். இதனால் அம்மாநில பாஜக அரசு கோமியப் பயன்பாட்டில் இருந்து பின்வாங்கியது,
இந்த நிலையில் பதாஞ்சலி நிறுவனத் திற்கு சாதகமாக அந்த நிறுவனத் தயாரிப்பான கோமியப் பினாயிலை வாங்க மத்தியப் பிரதேச அரசு முன்வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment