டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆகியவற்றை தனியார்க்கு தாரை வார்க்கும் திட்டத்தை அடுத்து இரு அரசுடமை வங்கிகளை தனியார்க்கு விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
· ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் அனைவரும் மத்திய அரசின் பட்ஜெட்டால் பாதிக்கப்படு வார்கள் என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
· அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்க்கு விற்கும் மத்திய அரசின் பட்ஜெட், மக்கள் விரோத பட்ஜெட் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· மோடி அரசின் பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, பெண்களுக்கான மருத்துவ வசதி, நேரடி பண விநியோகம் குறித்து எதுவும் கூறப்படவில்லை என பொருளாதாரப் பேராசிரியர் அஸ்வினி தேஷ்பாண்டே கருத்திட்டுள்ளார்.
· மத்திய அரசின் பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு சென்ற ஆண்டை விட ரூ.6,000 கோடி நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஒதுக்கிய நிதி ரூ.99,311 கோடி. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி ரூ.93,234 கோடி.
தி ஹிந்து:
· மும்மொழிக் கொள்கை மத்திய அரசின் அலுவலகங்களுக்குப் பொருந்தாது என மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
· கரோனா தடுப்பூசி போடும் பணியில் பணியாளர்கள் ஈடுபட் டுள்ள தால், 2021 இல் நடத்தப்பட வேண்டிய மக்கள் கணக்கெடுப்பினை 2022 இல் நடத்த மத்திய அரசு முடிவெடுக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
· சென்னை நீலாங்கரை அருகே திருமண உடை அலங்காரத்துடன் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர்.
தி டெலிகிராப்:
· 2021-22 வரவு-செலவுத் திட்டத்திலிருந்து நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஒரு மய்ய செய்தி இந்திய மக்களுக்கு உள்ளது: நீங்கள் சொந்தமாக இருப்பதால் நீங்கள் ‘ஆத்ம நிர்பர்’ ஆக இருக்க வேண்டும். மத்திய அரசு உங்களுக்கு எந்த உதவியும் செய்யாது. சுதந்திரத்திற்குப் பின்னர் நாடு எதிர்கொண்டுள்ள மிக மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அது உங்களைப் பாதுகாக்காது. அதன் சொந்த சட்டங்கள் அதற்கு உறுதியளித்தாலும், உணவு பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு பாதுகாப்பை செயல்படுத்த இது அதிக செலவு செய்யாது. உடல்நலம், கல்வி மற்றும் உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் பிற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான கடமைகளை நிறைவேற்ற மாநில அரசுகளுக்கு இது போதுமான ஆதாரங்களை வழங்காது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவுவது போல் உங்கள் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யாது என ஜவகர்லால் பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் ஜெயதி கோஷ் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
பிபிசி நியூஸ் தமிழ்:
மியான்மா நாட்டில் ஆங் சாங் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- குடந்தை கருணா
2.2.2021
No comments:
Post a Comment