காந்தியார் நினைவுநாளில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நிகழ்ச்சியில் "மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்" நூல் அறிமுக விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 1, 2021

காந்தியார் நினைவுநாளில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நிகழ்ச்சியில் "மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்" நூல் அறிமுக விழா

தாம்பரம், பிப். 1-- தாம்பரத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப் பின் ஏற்பாட்டில் நடைபெற்ற காந்தியார் நினைவு நாள் நிகழ்ச் சியில்  மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம் நூல் அறிமுக விழா  நடைபெற்றது.

காந்தியார் மதவெறியர்களால் திட்டமிட்டு சுட்டு படுகொலை செய்யப்பட்ட நாளான நேற்று (30.1.2021) காலை தாம்பரம் சண் முகம் சாலையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மதநல்லிணக்க உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

இந்நிகழ்வில் பேராசிரியர் அருணன் எழுதிய காலம்தோறும் பிராமணீயம் நூலில் தந்தை பெரியார், திராவிடர்கழகம், தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்டுகள் பற்றிய தொகுப்பு நூலான மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம் புத்தகத்தை தாம் பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் .முத்தையன் அறிமுகப் படுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்தென்சென்னை மாவட்ட  குழு ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். விடுதலை சிறுததைகள் கட்சி நகர செயலாளர் ராமானுஜம் வரவேற்றார்.

தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை மாநில அமைப்பாளர் பேராசிரியர் அருணன், திமுக சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மனிதநேயமக்கள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் எம். யாக்கூப், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வழக் குரைஞர் தேவ.அருள்பிரகாசம், மதிமுக மாவட்டச் செயலாளர் மாவை மகேந்திரன், காங்கிரஸ் நகர தலைவர் ஜே.பி.விஜய்ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களின் பொறுப்பாளர்கள் புத்தகங் களை பெருமகிழ்வு டன் பெற்றுக் கொண்டனர்.

தாம்பரம் நகர திமுக டி.காம ராஜ், மதிமுக துரை-மணிவண்ணன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி தாம்பரம் தொகுதி செயலாளர் மு..ரஞ்சன், திமுக கலைஇலக்கிய அணி ஆதிமாறன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச்செயலாளர் எம்.சபியுல்லா, நகரத் தலைவர் முகமது இக்பால், எஸ்டிபிஅய் முகமது உசேன், சிபிஅய் (எம்எல்) .ஆபிரகாம், காங்கிரஸ் தாம்பரம் காந்தி,யுவராஜ், மதிமுக ராஜா முகமது, இளைஞர் பெருமன்றம் வி.காண்டீபன், சிபிஅய்(எம்) முருகன், செந்தில், இந்திய யூனியன் முசுலீம் லீக்முகம்மது ஆசிப் அலிகான், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதிசாலமன், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப் பாளர்கு.இராசன்மணி, திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் உள்பட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment