சென்னை,பிப்.3- அய்.நா. மனித உரிமைகள் ஆணை யத்தின் கூட்டம் நடைபெற இருப்பதையொட்டி, அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன், பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாடுகளின் அயல் உறவுத் துறை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப் பினர்கள், மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் கடிதங்களை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங் கையின் இனவெறி அரசு, ஈழத்தமிழர்களைத் திட்ட மிட்ட இனப்படுகொலை செய்து வருவதற்கு, அசைக்க முடியாத ஆவணங்கள் சான்றாக இருக்கின்றன.
விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கியது
2009 மே மாதம், மூன்று லட்சத்து 30 ஆயிரம் மக்களை, முள்ளிவாய்க்கால் என்ற இடத்திற்குள் சுற்றி வளைத் தனர். அந்த வேளையில், செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங் களை முடக்குவதற்காக, பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்து, வெள்ளை வேன்களில் ஆள் கடத்தி, அவர்களைக் காணாமல் போகவும் செய்தனர். 2009ஆம் ஆண்டு மே மாதம், 1லட்சத்து 47ஆயிரம் தமிழர் களைக் கொன்று குவித்த இலங்கை அரசு, தமிழர்களின் விடுதலைப் போராட் டத்தை ஒடுக்கியது. 2009ஆம் ஆண்டு, நார்வே- பிரான்சு, கனடா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழ்கின்ற, புலம்பெயர்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள் இடையே, ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ் ஈழம் அமைவதற்கு, அவர்கள் பெரும் ஆதரவு ஆதரவு அளித்தனர். 2011ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம், அய்.நா. அறிக்கையின் அடிப் படையில், ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறை வேற்றியது. விடு தலைப்புலிகள் உட்பட, இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழர் களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; அனைத்திற்கும் மேலாக, இலங்கை யின் வடக்கு கிழக்கு மாநிலங்களைப் பிரித்து, தனித்தமிழ் அமைப்பதற்கு, அய்.நா. மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்குப்பதிவு நடத்த வேண் டும் என தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் கோருகின்றது.
சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற வேண்டும்
இலங்கை வடக்கு மாகாண மன்றம், 2015ஆம் ஆண்டு, பிப்ரவரி 10ஆம் நாள் ஒரு தீர்மானம் நிறைவேற் றியது. அதன்படி, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநி லங்களை ஒன் றாக இணைக்க வேண்டும்; சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்; தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என அந்தத் தீர்மானம் கோருகின்றது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங் களில், அய்.நா. மன்றத்தின் மேற்பார்வை யில் ஒரு பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று, அந்தத் தீர்மானம் வலி யுறுத்துகின்றது. எனவே, அய்.நா. மனித உரிமைகள் மன்றம் மற்றும் அய்.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளும் சேர்ந்து, கீழ் காணும் கோரிக்கைகளை ஆய்வு செய்து, தீர்வு காண வேண்டும் என, நாங்கள் கோருகின்றோம்.
1. ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையை ஏற்க வேண்டும்; அய்.நா. மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
2. 2015 பிப்ரவரி 10ஆம் நாள், இலங்கை வடக்கு மாகாண மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை, ஏற்க வேண்டும்.
3. இலங்கை அரசு நடத்துகின்ற எந்த விசாரணையின் மீதும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை; எனவே, பன்னாட்டுக் குற்ற இயல் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
4. இந்திய அரசு, மனித உரிமைகள் மன்ற உறுப்பு நாடுகளை ஒருங் கிணைத்து, நிகழ்ச்சி நிரல் 4இன்படி, சிறப்பு ஆணையர் ஒருவரைத் தெரிவு செய்து, இலங்கையில் நடைபெறு கின்ற மனித உரிமை மீறல்கள், தமி ழர்களுக்கு எதிராக ஒடுக்குமுறை களைக் கண்காணிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.
அ) இலங்கையில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களைக் கண்கா ணித்து, உடனுக் குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்;
ஆ) தொடர்பு உடைய உறுப் பினர்களுடன், இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்;
இ) இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில், மனித உரிமை மீறல் கள் குறித்து, அய்.நா. பொதுப் பேர வைக்கும், மனித உரிமைகள் மன்றத் திற்கும் ஆய்வு அறிக்கை வழங்க வேண்டும்;
ஈ) பிரச்சினைகளை உடனுக்குடன் வெளிக்கொணர வேண்டும்; அதி காரபூர்வ செய்தி அறிக்கைகளை வெளியிட வேண்டும். இலங்கைச் சிறைகளில் அடைக் கப்பட்டுள்ள தமிழர்களை விடுவித்து நீதி வழங்க வேண்டும். இவ்வாறு வைகோ கோரிக்கை விடுத் துள்ளார்.
No comments:
Post a Comment