அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் இரண்டு பிரிவுகளின் மாணவர் சேர்க்கை ரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 2, 2021

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் இரண்டு பிரிவுகளின் மாணவர் சேர்க்கை ரத்து

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை,பிப்.2- அண்ணா பல் கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் இரண்டு பிரிவுகளின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

அகில இந்தியத் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை, இந்த முறை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நிலையில், மத்திய அரசின் இடஒதுக்கீட்டு கொள்கை ஏற்புடையதல்ல என்பதால், இந்த ஆண்டில் எம்.டெக். படிப்பில் பயோடெக்னாலஜி மற்றும் கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என சமீபத்தில் பல் கலைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் குழலி, சித்ரா உள்ளிட்ட மாணவிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதி பி. புகழேந்தி முன்பு முறையீடப்பட்டது. அதனையேற்ற நீதிபதி வழக்கை இன்று (பிப்ரவரி 2ஆம் தேதி) விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார். எம்.டெக்., படிப்புகளுக்கு தமிழக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment